அக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரி டில்லி பாபு தயாரித்த மரகத நாணயம், ராட்சசன், ஓ மை கடவுளே, பேச்சிலர் படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்களாக மாறிய நிலையில், அடுத்ததாக ‘கள்வன்’, ‘மிரள்’ உள்ளிட்ட பல நம்பிக்கைக்குரிய படங்களை தயாரித்து வருகிறார். அந்த வரிசையில் இப்போது ‘மிடில் கிளாஸ்’ படம் தயாராகிறது.
இந்த படத்தில் முனிஷ்காந்த் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, விஜயலட்சுமி அகத்தியன், ராதாரவி, மாளவிகா அவினாஷ், வேல ராமமூர்த்தி, வடிவேல் முருகன் (கோடாங்கி), குரைஷி மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
நடுத்தர குடும்பத்தில் நடக்கும் சம்வவங்களை மையப்படுத்தி, அசத்தலான பொழுதுபோக்கு குடும்பப் படமாக உருவாகிறது.
இதன் படப்பிடிப்பு வரும் ஜூன் 27-ல் தொடங்கி, ஒரே ஷெட்யூலில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் குழு:-
சுதர்சன் சீனிவாசன் (ஒளிப்பதிவு), சந்தோஷ் தயாநிதி (இசை), MSP மாதவன் (கலை), ஷான் லோகேஷ் (எடிட்டிங்), டான் அசோக் (ஸ்டண்ட்ஸ்), கார்த்திக் நேத்தா & கதிர்மொழி (பாடல் வரிகள்),K.Poornesh (Executive Producer), SS.ஸ்ரீதர் (தயாரிப்பு நிர்வாகி), வின்சி ராஜ் (வடிவமைப்பு),J.நந்தா (உடைகள்), வினோத் சுகுமார் (மேக்கப்), ராஜேந்திரன் (ஸ்டில்ஸ்), DEC – டிஜிட்டல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் (புரமோஷன் & டிஜிட்டல் மார்க்கெட்டிங்), சுரேஷ் சந்திரா-ரேகா D’One (மக்கள் தொடர்பு), KV துரை (கிரியேட்டிவ் தயாரிப்பாளர்).