கடந்தமுறை 60 பேர்; இந்த முறை 200 பேர்… நம்ம வீடு வசந்த பவன், இராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் நடத்திய இரத்ததான முகாமில் முன்னுதாரணம்!

சென்னையிலுள்ள நம்ம வீடு வசந்த பவன், இராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் இரத்ததான வங்கியுடன் இணைந்து தொடர்ச்சியாக மூன்றாவது வருடமாக இரத்த தான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது.

வசந்த பவன் ஊழியர்களோடு நடக்கும் இந்த இரத்த தான நிகழ்வில் கடந்த இரண்டு வருடங்கள் 50லிருந்து 60 பேர் மட்டுமே இரத்த தானம் செய்திருக்கின்றனர். ஆனால், இந்த வருடம் 200 பேர் இரத்த தானம் செய்திருக்கின்றனர்.

நிகழ்வை தலைமை தாங்கி தொடங்கி வைத்த, வசந்த பவன் உரிமையாளர் ரவியின் மனைவி சொர்ணலதா பேசும்போது, “அரசு மருத்துவமனையில் இந்த நிகழ்வை நடத்தும்போது அதிக மக்களிடம் இது சென்றடைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதே நோக்கம். சென்னையில் உள்ள எங்கள் ஊழியர்கள் விருப்பப்பட்டு இரத்த தானம் செய்து வருகிறார்கள்.  இந்த வருடம் 200 பேர் வந்திருக்கிறார்கள். அடுத்த வருடம் இந்த எண்ணிக்கை அதிகமாக வேண்டும் என்பதுதான் விருப்பம். இரத்த தான நிகழ்ச்சியை தொடர்ந்து மூன்றாவது வருடம் இராயப்பேட்டை அரசு மருத்துவமனையுடன் இணைந்து நடத்தியது மகிழ்ச்சி” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here