‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ இயக்குநரோடு என்டிஆர் இணையும் படம் பூஜையுடன் துவங்கியது!

‘கே.ஜி.எஃப்’, ‘சலார்’ போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த பிளாக்பஸ்டர் இயக்குநர் பிரஷாந்த் நீலுடன் மாஸ் நடிகர் என்டிஆர் கைக்கோக்கிறார். ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தத் திரைப்படம், தற்காலிகமாக ‘என்டிஆர்நீல்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 2024 தொடங்கி இருப்பதால், என்டிஆர் மற்றும் பிரஷாந்த் நீல் படம் பற்றி தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்திருந்தனர். இப்படத்தின் பூஜை ஹைதராபாத்தில் இன்று நடைபெற்றது. என்டிஆர் மற்றும் இயக்குநர் நீல் தங்களது குடும்பத்தினருடன் இந்த பிரம்மாண்ட விழாவில் கலந்து கொண்டனர்.

ரசிகர்களை குஷிப்படுதுத்தும் வகையில், இந்தப் படம் ஜனவரி 9, 2026 அன்று வெளியாகும் என வெளியீட்டுத் தேதியையும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். சங்கராந்தியை முன்னிட்டு இப்படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஜனவரி 9, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

பிளாக்பஸ்டர் ஹிட்களுக்கு பெயர் போன இயக்குநர் பிரஷாந்த் நீல், தனது தனித்துவமான மாஸ் விஷன் மூலம் என்டிஆரின் திரை இருப்பை புதிய உயரத்திற்கு எடுத்து செல்ல இருக்கிறார். இது நிச்சயம் திரைத்துறையில் புதிய அலையை உருவாக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

இப்படத்தை புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனங்களான மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் தயாரிக்கிறது. ‘கே.ஜி.எஃப்’ படத்தின் பிரம்மாண்டத்தை போலவே இந்தப் படத்தையும் பிரம்மாண்டமாக தயாரிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

புவன் கவுடா ஒளிப்பதிவு செய்ய, ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பை சலபதி நிர்வகிப்பார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here