இதற்கான அறிவிப்பு, வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட போஸ்டருடன் வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் தெற்கு மும்பையை சேர்ந்த அருண் கோலி என்பவரிடமிருந்து சித்தூர் மாவட்டம் குப்பத்தை சேர்ந்த சுப்ரமணியம் என்பவருக்கு எழுதிய உள்நாட்டு கடிதமும், அதில், ‘அவசரம்: உங்களது வருகை அவசியமானது’ என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கடிதத்துடன் துப்பாக்கி, தோட்டாக்கள், பழைய ரூபாய் நோட்டு, தொலைபேசி மற்றும் சுருட்டு ஆகியவைகளும் இடம்பெற்றிருக்கிறது. இதனுடன் கிராமத்து சூழலின் பின்னணியில் ஆலயம் ஒன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கூடவே, ‘அக்டோபர் 31-ம் தேதி மாஸான சம்பவம்’ என்றும் அறிவித்திருக்கிறார்கள்.
இது சுதிர்பாபுவின் பதினெட்டாவது திரைப்படம். தெய்வீக அம்சம் கொண்ட காலகட்டத்தை சார்ந்த அதிரடி கதைக்களம். கதை 1989-ம் ஆண்டில் குப்பம் எனும் ஊரில் நடைபெறுவது போல் அமைக்கப்பட்டிருக்கிறது. மண் மனம் கமழும் படைப்பு.