சென்னை கே.கே நகரில் திறக்கப்பட்ட ‘நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ்!’ நெல்லித்தோட்டம், தென்னந்தோப்பு, மாந்தோப்பு, பேக்டரி, திருமண மண்டபம் என அனைத்து வசதிகளும் அடக்கம்!

சென்னை கே.கே நகரில் ‘நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ்’ திறப்பு விழா 11.11. 2022 அன்று மாலை 7 மணியளவில் நடைபெற்றது.

விழாவில் தமிழ் நாடு திரைப்பட இயக்குநரகள் சங்க தலைவரும், பெப்சி தலைவருமான R.K.செல்வமணி, தயாரிப்பாளர் (அம்மா கிரியேஷன்ஸ்) T.சிவா, இயக்குனர் R.V.உதயகுமார், நடிகர் சித்ரா லட்சுமணன், நடிகர் பஞ்சு சுப்பு, ஒளிப்பதிவாளர்கள் சங்கத்தலைவர் கார்த்திக் ராஜா, சின்னத்திரை இயக்குனர்கள் சங்க செயலாளர் CRC.ரங்கநாதன், இயக்குனர்- தயாரிப்பாளர் நந்தன், தயாரிப்பு நிர்வாகிகள் சங்க தலைவர் பாலகோபி, கலை இயக்குனர்கள் சங்க செயலாளர் மோகன மகேந்திரன்,GBS K.நாகேந்திரன், K.ராஜேஷ்கண்ணா, ஆகியோர் கலந்துகொண்டு ஷூட்டிங் ஹவுஸை திறந்து வைத்தனர்.

சென்னையில் புறநகரில் மட்டுமே அதிகமான ஷூட்டிங் ஹவுஸ்கள் இருக்கின்றன. அங்கு படப்பிடிப்பை நடத்தினால் போக்குவரத்து நெரிசலில் சிக்கி அதிகமான நேரம், மற்றும் எரிபொருள் வீணாகி வருகிறது. இதனால் குறிப்பிட்ட நேரத்தில் , குறிப்பிட்ட நாட்களில் படப்பிடிப்பை முடிக்க முடியாமல் போகிறது என்பது அனைத்து சினிமா தொழிலாளர்களுக்கும் தெரிந்த விஷயம்.

தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக திரு.மஸ்கட் சி. ராமலிங்கம் அவர்களின் ராம் ஸ்டுடியோஸ் நிறுவனம் சென்னை கே.கே. நகரில் (452 ஆர்.கே. சண்முகம் சாலை) ‘நேத்ரா ஷூட்டிங் ஹவுஸ்’ என்ற சொகுசு ஷூட்டிங் பங்களாவை உருவாக்கி உள்ளது.

பார்க்கிங் உட்பட அனைத்து வசதிகளையும் கொண்டு இதை உருவாக்கியுள்ளனர்.இதை தவிர வெளிப்புற படப்பிடிப்புக்கு இடம் தேவையென்றால் அதற்கும் புறநகரிலேயே பேக்டரி செட்டப், திருமண மண்டபம், மாந்தோப்பு, பார் செட்டப், நெல்லித்தோட்டம், தென்னந்தோப்பு, வில்லேஜ் செட்டப், மற்றும் பிரம்மாண்ட செட்டுகள் போட தரிசு நிலம் என படப்பிடிப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் ராம் ஸ்டுடியோஸ்’
செய்துள்ளனர்.

உதவி இயக்குனராக இருந்து இயக்குனராக முதல் படம் இயக்கவிருப்பவர்களுக்கு சலுகைகளும் தரவிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here