ஆர்.ஜே. பாலாஜி ஹீரோவாக நடிக்கும் புதிய படம் ‘சிங்கப்பூர் சலூன்.’
இந்த படத்தை ரெளத்திரம், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா உள்ளிட்ட படங்களை இயக்கிய கோகுல் இயக்குகிறார்.
ஆர்.ஜே. பாலாஜி இதுவரை ஹீரோவாக நடித்த ‘எல்.கே.ஜி.’, ‘மூக்குத்தி அம்மன்’, ‘வீட்ல விசேஷங்க’ படங்கள் நல்ல வரவேற்பை பெற்று, வசூலையும் குவித்தன. அதேபோல, வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனலும் அடுத்தடுத்து கமர்ஷியல் ரீதியாக வெற்றிப் படங்களைக் கொடுத்து வருகிறது.
ஆர்.ஜே. பாலாஜி அவரது படங்களுக்கு அவரே இயக்குநராக அல்லது அவரது முதன்மை / உதவி இயக்குநர்களுடன் கூட்டணி சேர்வார். இந்த முறை கோகுல் இணைகிறார்.
இந்த கூட்டணியில் உருவாகும் ‘சிங்கப்பூர் சலூன்’ தரமான படமாக இருக்கும் என்று நம்பலாம்.
பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்படுகிற இந்தப் படம், முக்கிய கதாபாத்திரத்தில் பல பிரபல நடிகர்கள் நடிக்கக் கூடிய மல்டி ஸ்டாரர் படமாக இருக்கும்.
விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்து வரக்கூடிய ‘சிங்கப்பூர் சலூன்’ அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாக இருக்கிறது.