‘மெட்ராஸ்’ ஹரி, ‘டூலெட்’ ஷீலா நடிக்கும் புதிய படம்! இயக்குநர் பா.ரஞ்சித் துவங்கி வைத்து வாழ்த்து!

‘மெட்ராஸ்’ படத்தில் ஜானியாக தோன்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஹரிகிருஷ்ணன், முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார்.

‘மஞ்சள் சினிமாஸ்’ சார்பில் கோல்டன் சுரேஷ், விஜயலஷ்மி தயாரிப்பில் உருவாகும் தலைப்பிடப்படாத இந்த படத்தில், ‘டூலெட், மண்டேலா திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் உள்ளம் கவர்ந்த நடிகை ஷீலா ராஜ்குமார் கதாநாயகியாக நடிக்கிறார்.

கோல்டன் சுரேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் ஜஸ்டின் பிரபு இயக்குகிறார்.

இந்த படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று (6.7. 2022) நடைபெற்றது. இயக்குநர் பா.ரஞ்சித்  கலந்துகொண்டு படத்தின் பணிகளை துவங்கி வைத்து படக்குழுவை வாழ்த்தினார்.

நடுத்தர வர்க்கத்தின் அன்றாட வாழ்க்கையில் நடக்கும் எதார்த்தமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிகழவிருக்கிறது.

படக்குழு:-

தயாரிப்பாளர்: கோல்டன் சுரேஷ், விஜயலஷ்மி
இயக்குநர்: ஜஸ்டின் பிரபு
ஒளிப்பதிவு: A.குமரன்
படத்தொகுப்பு: வெங்கட் ரமணன்
வசனம்: சிவசங்கர்
ஸ்டில்ஸ் : M.குமரேசன்
புரொடக்‌ஷன் மேனேஜர்: T.ராஜன்
மக்கள் தொடர்பு: A. ஜான்
தயாரிப்பு நிறுவனம்: மஞ்சள் சினிமாஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here