‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்’ சினிமா விமர்சனம்

லாஸ்ட் 6 ஹவர்ஸ்‘ சினிமா விமர்சனம்

கமர்ஷியல் அம்சங்களை எதிர்பார்க்காமல் வித்தியாசமான கதைகளை, தனித்துவமான மேக்கிங்கை விரும்புகிறவர்களுக்கான படம். கிரைம் திரில்லர் சப்ஜெக்டில் ‘லாஸ்ட் 6 ஹவர்ஸ்.’  

உடல்பலமும் மூளை பலமும் கொண்ட, கொள்ளையடிப்பதில் தேர்ந்த நபர்களை வைத்து உலகின் பல இடங்களில் பெரியளவில் கொள்ளைச் சம்பவங்களை நிகழ்த்துகிறது சர்வதேச கும்பலொன்று. அவர்களுக்காக நம்மூரைச் சேர்ந்த மூன்று இளைஞர்களும் ஒரு இளம்பெண்ணும் டீமாக இணைந்து பங்களிப்பைத் தருகிறார்கள். அதற்கான பங்கையும் (Share) பெறுகிறார்கள்.

அதன் தொடர்ச்சியாக நகரத்தில் பிரமாண்ட வீடொன்றில் இருக்கிற பல கோடி ரூபாயை கொள்ளையடிக்க அந்த டீம் முடிவு செய்து களமிறங்குகிறது. ஆறு மணி நேர அவகாசத்தில் சம்பவத்தை நடத்தி முடிக்க வேண்டிய கட்டாயம் வேறு!

அந்த வீட்டில், பார்வைத்திறனற்ற பரத் தனியாக வசிக்கிறார். அந்த வீடு அதி நவீன வசதிகளால் கட்டமைக்கப்பட்ட பாதுகாப்பு வளையத்தில் இருக்கிறது. அந்த பாதுகாப்புகளைத் தகர்த்து உள் நுழைகிற கொள்ளைக் கும்பலின் திட்டம் நிறைவேறியதா இல்லையா என்பதே கதையோட்டம்… கொள்ளையடிக்க வந்தவர்களின் நண்பன் ஒருவன் பரத்திடம் ஏற்கனவே சிக்கியிருக்கிறான். அதற்கான காரணம் திரைக்கதையின் பரபரப்புக்கு கேட் திறந்துவிடுகிறது! படத்தின் நீளம் 101 நிமிடங்கள் மட்டுமே. இயக்கம்:- சுனிஷ்குமார்

பரந்து விரிந்த உடற்கட்டுக்குச் சொந்தக்காரராக வருகிற பரத், கண்களை இழந்த நிலையில் செவிகளால் சத்தங்களை கேட்டுக் கேட்டு கொள்ளையர்களைத் தாக்குகிற காட்சிகள் மிரட்டல். அவரது பார்வை பறிபோனது எப்படி என விளக்கும் பிளாஷ்பேக் காட்சிகள் கலங்க வைப்பவை.

கொள்ளைக் கும்பலில் ஒருவராக வருகிற விவியா சந்த்தின் அழகும் இளமையும் ஈர்க்கிறது. பரத்துடன் மோதும் காட்சிகளில் அனல் பறக்கிறது. அவருக்கும் பரத்துக்குமான தொடர்பு திரைக்கதையின் எதிர்பாராத டிவிஸ்ட்.

கொள்ளையடிப்பதில் சுறுசுறுப்பு காட்டுவது, பரத்திடம் துப்பாக்கி முனையில் மாட்டிக் கொண்டு திணறுவது என அந்த மூன்று இளைஞர்களின் (அனுப் காலித், அதில் இப்ராகிம், அனுமோகன்) நடிப்பு நேர்த்தி.

தினேஷ் காசி அமைத்திருக்கும் ஆக்ஷன் காட்சிகள், கைலாஷ் மேனனின் பின்னணி இசை, பிரவீன் பிரபாகரின் எடிட்டிங் படத்தின் பலம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here