விக்ரம்பிரபு, வாணி போஜன் நடிக்க, புதுமுக இயக்குநர் ஆர். கார்த்திக் அத்வைத் இயக்கியுள்ள படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு.’
வரும் ஜூன் 23-ம் தேதி வெளிவரவுள்ள இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா 16.6. 2023 அன்று சென்னையில் நடந்தது.
நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் அத்வைத், ‘‘நான் ஹைதராபாத் திலிருந்து வருகிறேன். முதன்முறையாக விக்ரம் பிரபுவை சந்தித்து கதை சொன்னபோது அவர் வியந்து கேட்டார். அதுதான் எனக்கும் பெரிய ஊக்கமாக இருந்தது. ஒரு முதல் பட இயக்குநருக்கு விக்ரம்பிரபு போலவும் இந்த டீம் போலவும் யாரும் சப்போர்ட் செய்வார்களா என்று தெரியவில்லை. ஒளிப்பதிவாளர் என்னுடைய எண்ணத்தை புரிந்துக்கொண்டு காட்சிகளை அழகாக படமாக்கினார். படத்தில் ஒன்பது சண்டைக்காட்சிகள் இருக்கிறது. சூழ்நிலைக்கு ஏற்ப இந்த சண்டைக்காட்சி மாறுபடும். ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி அதை புரிந்து கொண்டு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்தார்” என்றார்.
ஒளிப்பதிவாளர் ஶ்ரீதர், ‘‘இதுவொரு மிகப்பெரிய ஆக்ஷன் படம். இதன் 70 சதவீத படப்பிடிப்பு இரவில்தான் நடந்தது. பார்வைக் குறைபாடுள்ள ஒருவனின் உலகம் எப்படியிருக்கும் என்பதைக் காட்ட இப்படம் எனக்கொரு வாய்ப்பாகபும், சவாலாகவும் இருந்தது. சண்டைக் காட்சி 40 நாட்கள் படமாக்கப் பட்டது. விக்ரம் பிரபு நடித்த கிளைமாக்ஸ் சண்டை காட்சி கண்ணாடிகள் நடுவில் படமாக்கப்பட்டது. அது படத்தின் பெரிய ஹைலைட்டாக இருக்கும்” என்றார்.
ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி, ‘‘விக்ரம் பிரபு சாருடன் நிறைய படங்களில் பைட்டராக நடித்திருக்கிறேன். இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி உள்ளேன். முதல் படத்திலேயே 40 நாட்கள் சண்டை காட்சி. சண்டைக் காட்சியில் விக்ரம் பிரபு கண் தெரியாதவர் போல் நடிக்க வேண்டும். அதற்கேற்றபடி சண்டைக் காட்சிகள் படமாக்க வேண்டியிருந்தது. விக்ரம்பிரபு சார் கடுமையாக நடித்திருக்கிறார்” என்றார்.
கதாநாயகன் விக்ரம் பிரபு, ‘‘இயக்குநர் கார்த்திக் சினிமாவில் ரொம்பவும் ஆர்வம் உள்ளவர். இந்த பட அனுபவம் என்றைக்கும் மறக்காது அப்படிப்பட்ட படம் இது. கண்ணுக்கு தெரியற ஒரு விஷயம் உண்மையாகவும் இருக்காது. கண்ணுக்கு தெரியாத விஷயம் தப்பாகவும் இருக்காது என்ற ஒரு அழகான விஷயத்தை வைத்துதான் இந்த ஸ்கிரிப்ட் எழுதியிருந்தார். இதில் நிறைய அர்த்தங்கள் இருக்கிறது. இந்த படத்தில் வாணி போஜன் அழகான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். கன்னட ஹீரோ தனஞ்ஜெயாவும் ஸ்கிரிப்டை புரிந்து கொண்டு நடித்துக் கொடுத்திருக்கிறார். இது என் மனத்துக்கு நெருக்கமான படம். ரசிகர்களுக்கு தியேட்டரில் நல்ல அனுபவம் தரும் படமாக இருக்கும். உங்கள் ஆதரவு தேவை” என்றார்.
கதாநாயகி வாணி போஜன், ‘‘இந்த ஸ்கிரிப்ட் எனக்கு ரொம்ப பிடிச்சது. விக்ரம் பிரபுவுடன் நடிக்க வேண்டும் என்று ரொம்ப நாள் ஆசை. இந்த படத்தில் விக்ரம் ஆக்டிங், ஆக்ஷன் எல்லாமே பிடித்திருந்தது. என்னையும் ரொம்ப அழகா காட்டியிருக்காங்க. படத்தை எல்லோரும் சப்போர்ட் பண்ண கேட்டுக்கொள் கிறேன்” என்றார்.
நிகழ்வில், படத்தை வெளியிடவிருக்கிற ‘எஸ் பி சினிமாஸ்’ கிஷோர், பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா, எடிட்டர் சி.எஸ். பிரேம்குமார் உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.
நிகழ்வில் படத்தின் மக்கள் தொடர்பாளரும் மக்கள் தொடர்பாளர்கள் சங்கத் தலைவருமான டைமண்ட் பாபுவின் பிறந்த நாள் படக்குழு முன்னிலையில் கேக்வெட்டி கொண்டாடப்பட்டது.
உருவாக்கத்தில் உறுதுணை:-
எழுத்து, இயக்கம் – கார்த்திக் அத்வைத்
ஒளிப்பதிவு – ஶ்ரீதர்
எடிட்டிங் – சி.எஸ்.பிரேம்குமார்
இசை – சாகர்
கலை இயக்கம் – பி.எல். சுபேந்தர்
சண்டை – தினேஷ் காசி
பாடல் – கார்த்திக் நேத்தா
நடனம் – தஸ்தா
சிகை அலங்காரம் – சேகர்
புகைப்படம் – முருகதாஸ்
விளம்பர வடிவமைப்பு – REDDOT பவன்
D I – ரங்கா
ஆடை வடிவமைப்பாளர் – டீனா
தயாரிப்பு நிறுவனம் – கார்த்திக் மூவி ஹவுஸ்
உலகமெங்கும் வெளியீடு – எஸ் பி சினிமாஸ்
மக்கள் தொடர்பு – டைமண்ட் பாபு, சதிஷ் (AIM)