பான் இந்திய ஸ்டார் ஆகிறார் கன்னட ஹீரோ பிரவீர் ஷெட்டி! ஆகஸ்டில் துவங்குது ‘எங்கேஜ்மெண்ட்’ தெலுங்குப் படத்தின் படப்பிடிப்பு.

‘சைரன்’ படத்தின் மூலம் கன்னட சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான பிரவீர் ஷெட்டி, தனது சிறப்பான நடிப்புத் திறமையால் ஏராளமான ரசிகர்களைப் பெற்றுள்ளார். தற்போது அவர் தென்னிந்தியா முழுவதும் கவனம் ஈர்க்கும் விதமாக பான் இந்தியா நாயகனாக உருவாகிறார். மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகிற ’எங்கேஜ்மெண்ட்’ என்ற தெலுங்குப் படத்தில் நடிக்கிறார்.

தற்போது படப்பிடிப்புக்கு முந்தைய பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறது.

’ரேவ் பார்ட்டி’ படத்தின் மூலம் பிரபலமான இயக்குநர் ராஜு போனாகானி இந்த படத்தை தனது லட்சியத் படைப்பாக இயக்கவிருக்கிறார். அவருடன், திரைப்படத் தயாரிப்பில் நிபுணத்துவம் பெற்ற ஜெயராம் தேவசமுத்திரம் இணைந்து பெரும் எதிர்பார்ப்புமிக்க மிகப்பெரிய படைப்பாக இந்த படத்தை உருவாக்க இருக்கிறார். கார்ஷீர், டார்ஜிலிங், கொடைக்கானல், உதய்பூர் மற்றும் கோவா உள்ளிட்ட அழகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப் பட்டுள்ளது.

இந்த படத்தில் பிரவீர் ஷெட்டிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா கவுடா நடிக்கிறார். ‘பிரவீணா’ படம் மூலம் தனது சிறப்பான நடிப்பால் குறிப்பிடத்தக்க ரசிகர்களைப் பெற்றிருக்கும் ஐஸ்வர்யா கவுடா, பிரவீர் ஷெட்டி ஜோடி இந்த படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய உயரத்திற்கு செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு முழுவதும் உள்ள பலதரப்பட்ட ரசிகர்களைக் கவரும் வகையில் தெலுங்கு, கன்னடம், தமிழ், இந்தி, மலையாளம் என பல மொழிகளில் ஒரே சமயத்தில் இந்த படம் வெளியாக உள்ளது.

வெங்கட் மன்னம் ஒளிப்பதிவு செய்யும் இப்பத்திற்கு திலீப் பண்டாரி இசையமைக்கிறார். ரவி.கே படத்தொகுப்பு செய்கிறார்.

இளைஞர்களை மையப்படுத்திய காதல் பொழுதுபோக்கு திரைப்படமாக மட்டுமின்றி சினிமா ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு அழுத்தமான கதைக்களத்தையும் கொண்டிருப்பதால் இந்த படம். சமீபத்தில் வெற்றி பெற்ற பான் இந்தியா திரைப்படங்களின் வரிசையில் குறிப்பிடத்தக்க இடத்தைப் பிடிக்கும் என நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here