அரசியலை சாமானிய மக்களும் புரிந்து கொள்ள பொதுமக்கள் முன்னிலையில் புதிய தலைமுறையின் ‘வட்டமேசை விவாதம்.’

புதிய தலைமுறை தொலைக்காட்சியில் நடப்பு அரசியலை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும் நோக்கில் சுவையான விவாதங்களின் வழியாக கொண்டு சேர்ப்பதுதான் ‘வட்டமேசை விவாதம்‘ நிகழ்ச்சி.

தமிழகம் மற்றும் இந்திய அளவில் பரபரப்பாகப் பேசப்படும் அரசியல் நிகழ்வை மையமாகக் கொண்டு ஆக்கப்பூர்வமாக விவாதிப்பதுதான் வட்டமேசை விவாதத்தின் நோக்கம். விறுவிறுப்பான தலைப்புகள் மூலம் ஒவ்வொரு மாதமும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

நிகழ்ச்சியை புதிய தலைமுறையின் அரசியல் பிரிவு ஆசிரியர் கார்த்திகேயன் தொகுத்து வழங்குகிறார்.

இந்த விவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.

பொது மக்கள் முன்னிலையில் நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி புதியதலைமுறை தொலைக்காட்சியில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here