அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி இயக்கத்தில், வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் வெருஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், பாலசரவணன், காயத்ரி, தேவ் ராம்நாத் ஆகியோரது நடிப்பில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான ’பேச்சி’ வித்தியாசமான கதைக்களம் மட்டுமின்றி மாறுபட்ட கோணத்தில் சொல்லப்பட்ட திகில் ஜானரால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
திரையரங்குகளில் இரவுக் காட்சிகள் கூட ஹவுஸ் புல்லாகும் அளவுக்கு ‘பேச்சி’ திரைப்படம் மக்களிடம் வரவேற்பு பெற்றதோடு, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரையும் கவர்ந்த படமாகவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்று 25 நாட்களை கடந்து ஓடிய ‘பேச்சி’ விமர்சன ரீதியாகவும் பெரும் பாராட்டுக்களை குவித்தது. படம் வெளியாவதற்கு முன்னரே திரையிடப்பட்ட சிறப்பு காட்சியில் படம் பார்த்த பத்திரிகையாளர்கள் இயக்குநர் ராமச்சந்திரன்.பி அவர்களை மட்டுமின்றி ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களை வெகுவாக பாராட்டி எழுதினார்கள்.
திகில் படமாக இருந்தாலும், அதை வழக்கமான பாணியில் சொல்லாமல், வித்தியாசமான கோணத்தில் சொன்னதோடு, ரசிகர்களுக்கு புதுவிதமான திகில் அனுபவத்தை கொடுத்த ‘பேச்சி’ திரைப்படம் தற்போது ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளது.
அமேசான் பிரைம் வீடியோ மற்றும் ஆஹா தமிழ் ஓடிடி தளங்களில் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் பல மொழிகளில் ‘பேச்சி’ வெளியாக உள்ளது.