பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்ற ‘சங்கீத உத்சவ்.’ புதுயுகம் தொலைக்காட்சியில் தினமும் காலை 8 மணிக்கும் இரவு 7 மணிக்கும்… 

மார்கழி மாதம் தொடங்குவதையொட்டி சென்னையில் டிசம்பர் சீசன் எனப்படும் இசைத் திருவிழாக்கள்  சபாக்களில் நடைபெறும். உலகம் முழுவதிலும் உள்ள கர்நாடக இசை ரசிகர்கள் ஆர்வத்துடன் இதில் பங்கேற்பர்.அந்த வகையில் சென்னை தியாகராய நகர் வாணி மஹாலில், நடைபெற்ற சென்னையில் சங்கீத உத்சவ் நிகழ்ச்சியில்  பிரபல கர்நாடக இசைக்கலைஞர்கள் பங்கேற்று ரசிகர்களை மகிழ்வித்தனர்.

நித்யஸ்ரீ மகாதேவன்  வீணை வித்வான் ராஜேஷ் வைத்யா ,பாடகர் சித் ஶ்ரீராம்,மாண்டலின் ராஜேஷ் ,திருவாரூர் பக்தவத்சலம்,விஷாகா ஹரி,சித்ர வீணா ரவிகிரன்,ஶ்ரீ ரஞ்சனி சந்தான கோபாலன் உள்ளிட்ட பிரபல கர்நாடக இசை கலைஞர்கள்பங்கேற்று கர்நாடக இசைப்பாடல்களையும் தமிழ் பாடல்களையும் பாடி உற்சாகமூட்டினர்.

இந்த நிகழ்ச்சி புதுயுகம் தொலைக்காட்சியில் வரும் டிசம்பர் 16 தொடங்கி தினமும்  காலை 8 மணிக்கும் இரவு 7 மணிக்கும் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியை ஜீ கே மீடியாவுடன் புதுயுகம் இணைந்து வழங்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here