சினிமா ரசிகர்கள் தங்களது அபிமான நட்சத்திரத்தை சந்திக்க எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என காத்திருப்பார்கள். அந்த வகையில் நடிகர் பிரபாஸை சந்திப்பதற்கான வாய்ப்பு ‘ராதே ஷ்யாம்’ படம் மூலம் அவரது ரசிகர்களுக்கு கிடைத்தது.
பிரபாஸ் நடிப்பில் வெளியான ‘ராதே ஷ்யாம்’ படத்திற்காக அறிவிக்கப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற ரசிகர்களை சந்திக்கும் நிகழ்வு ஹைதராபாத்தில் நடைபெற்றது.
அடுத்தடுத்த படங்களின் பரபரப்பான படப்பிடிப்புக்கு இடையில், ரசிகர்களுக்காக நேரம் ஒதுக்கி கலந்து கொண்டார் பிரபாஸ், அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். ரசிகர்களின் உற்சாகமான கரவொலிகளுக்கிடையே பணிவாகவும், பக்குவமாகவும், புன்னகையுடனும் உரையாடினார்.
பிரபாஸ் தற்போது ஓம்ராவத் இயக்கத்தில் ‘ஆதி புருஷ்’, பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’, நாக் அஸ்வின் இயக்கத்தில் ‘ப்ராஜெக்ட் கே ‘ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

