நடிகர் ஆரி அர்ஜுனன் அமெரிக்காவில் இயங்கி வரும் முன்னணி மாற்று முதலீட்டு தள நிறுவனமான நண்பன் குழுமத்தின் இந்திய செயல்பாட்டிற்கான விளம்பர தூதுவராக (Brand Ambassador) நியமிக்கப்பட்டிருக்கிறார்.’
இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது…
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டல்லாஸ் என்னுமிடத்தில் நண்பன் குழும நிறுவனங்கள் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவற்றின் ஆளுகைக்கான தீர்வுகளை வழங்கி வருகிறது.
இந்நிறுவனத்தின் இந்திய செயல்பாட்டிற்கான அதிகாரப்பூர்வ விளம்பர தூதுவராக(Brand Ambassador) நடிகர் ஆரி அர்ஜுனனை நியமித்ததை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது.’நண்பன்’ என்ற சொல்லிற்கு இந்திய மொழிகளில் தனித்துவமான அடையாளத்தைப் பெற்றிருக்கும் தமிழ் மொழி, ‘உண்மையான நண்பன்’ என பொருள் உரைக்கிறது. அதன் அர்த்தத்திற்கு ஏற்ப உண்மையாக ‘நண்பன் குழுமம்’ பிறருக்கு உதவுகிறது. அதிலும் குறிப்பாக எந்த நிபந்தனையுமின்றி, பிரதிபலன் எதுவும் எதிர்பாராமல் உதவுகிறது.
மேலும் சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பினரும் பொருளாதார ரீதியில் சுதந்திரத்தை அடைவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டிருக்கிறது. இதனூடாக சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களை ஆதரிப்பதற்கான வாய்ப்பினை உருவாக்கியிருக்கிறது. ‘கிரீன் பிளானட்’ எனும் ‘பசுமையான பூமி’யை ஏற்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளுக்காகவும் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்டது.
நண்பன் குழும நிறுவனங்களில் நண்பன் வென்ச்சர்ஸ், நண்பன் ரியால்ட்டி, நண்பன் சோழா லேண்ட் ஹோல்டிங்ஸ், நண்பன் பிரைவேட் ஈக்விட்டி, நண்பன் இ எஸ் ஜி மற்றும் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளது. இவைகள் அனைத்தும் சுற்றுச்சூழல் மற்றும் சமுதாய சிக்கல்களை எதிர்கொண்டு, அதற்கான தீர்வுகளை உருவாக்கவும், அதனை மேம்படுத்தவும், உலகம் முழுவதும் உள்ள தனி நபர்கள் மற்றும் சமூகங்களுக்கு நிதி ஆதாரத்தை ஏற்படுத்தித் தருவதிலும் இணைந்து செயல்படுகின்றன.
அமெரிக்காவில் இயங்கி வரும் ‘நண்பன் அறக்கட்டளை’- சுய நிதி ஆதாரத்தில் இயங்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம். உலகம் முழுவதும் பல்வேறு வகையான சேவை திட்டங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறது.
நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் நிறுவப்பட்ட இந்நிறுவனம், விளையாட்டு, கலை, கலாச்சாரம், கிரீன் பிளானட் எனப்படும் பசுமை பூமியை ஊக்குவித்தல், குறைந்த கட்டணத்தில் தரமான மருத்துவ சிகிச்சை வழங்குதல் என ஏராளமான திட்டங்களில் தன்னுடைய பங்களிப்பை வழங்கி கொண்டிருக்கிறது. இந்த அறக்கட்டளை மூலம் தற்போது உலகம் முழுவதும் 35க்கும் மேற்பட்ட நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள நிலையான வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கு இந்த அறக்கட்டளை, தன்னாலான பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
தமிழ் திரையுலகில் பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக அனுபவம் கொண்ட நடிகராக அறியப்படுபவர் நடிகர் ஆரி அர்ஜுனன். திரைத்துறையில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ் சீசன் 4’ எனும் தனி நபர் திறனறி போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். அதிலும் இந்திய தொலைக்காட்சி வரலாற்றில் யாரும் பதிவு செய்யாத வகையில், 16 கோடிக்கும் மேற்பட்ட பார்வையாளர்களிடமிருந்து விருப்ப வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்ற இவர், தமிழ்நாட்டில் தன்னலமற்ற வகையில் சேவைகள் செய்தற்காக ‘சிறந்த சமூக செயற்பாட்டாளர்’ என அங்கீகரிக்கப்பட்டவர். இவர் மற்றவர்களுக்கு சேவை செய்வதற்கும், உலகில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துவதற்கும், வலுவான அர்ப்பணிப்புடன் கூடிய பணியை செய்து வருபவர்.
நண்பன் குழும நிறுவனங்களின் தலைவரும், நிறுவனருமான கோபால கிருஷ்ணன் கூறுகையில், ” நண்பன் குழும நிறுவனங்களின் விளம்பர தூதுவராக நடிகர் ஆரி அர்ஜுனனை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மற்றவர்களுக்கு சேவை புரிவதில் இவருக்கு இருக்கும் ஆர்வமும், நேர்மைக்கான நற்பெயரும், எங்கள் முதலீட்டாளர்களின் நிதி சார்ந்த கனவுகளை உயர்தர நெறிமுறைகளுடன் மற்றும் ஒருமித்த உணர்வுடன் நிறைவேற்றுவதற்கு உதவும் எங்களின் நோக்கத்தை முழுமையாக இணைக்கிறது.” என்றார்.
நண்பன் சோழா லேண்ட் ஹோல்டிங்ஸ் மற்றும் நண்பன் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தலைவரும், நிர்வாக பங்குதாரருமான நரேன் ராமசாமி கூறுகையில், ” நடிகர் ஆரி அர்ஜுனன் தனது பல்வேறு சேவை முயற்சிகள் மூலம் சமூகத்தை காப்பாற்றும் வகையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றுவதற்காக அறியப்பட்டவர். அவருடைய செயல்பாடு, நண்பனின் தொலைநோக்குப் பார்வை மற்றும் பணிகளுடன் முழுமையாக ஒத்துப்போகின்றன. மேலும் எங்களின் அதிகாரப்பூர்வ தூதராக அவரை முன்னிலைப்படுத்துவதிலும், பிரதிநிதித்துவம் அளிப்பதிலும் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்” என்றார்.
நண்பன் குழுமத்தின் இணை நிறுவனர்களான மணி சண்முகம் மற்றும் சக்திவேல் ஆகியோர் கூறுகையில், ”நடிகர் ஆரி அர்ஜுனனை நண்பன் குழும குடும்பத்திற்கு வரவேற்பதில் பெருமிதமும், மகிழ்ச்சியும் அடைகிறோம்” என்றனர்.
ஆரி அர்ஜுனன் நண்பன் குழும விளம்பர தூதராக நியமிக்கப்பட்டதன் மூலம், நண்பன் குழும நிறுவனங்கள் மிகவும் நம்பகமான, புதுமையான மாற்று முதலீட்டு தளமாக மாற்றம் பெற்றிருக்கிறது. மேலும் அதன் தொலைநோக்குப் பார்வையை எட்டுவதற்கு சிறந்த பாதையையும் உறுதிப்படுத்தி உள்ளது” என செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நண்பன் குழும நிறுவனங்களைப் பற்றிய கூடுதல் தகவலை தெரிந்து கொள்ள www.nanban.com எனும் இணையதள முகவரியை பார்வையிடலாம்.