ஏ.ஆர்.காமராஜ் இயக்கத்தில் க்ரைம் திரில்லராக உருவான ‘பிறர்தர வாரா.’ ஏப்ரல் 14-ம் தேதி மூவி வுட் ஓடிடி தளத்தில் வெளியீடு.

க்ரைம் த்ரில்லர் சப்ஜெக்டில் ஏ.ஆர்.காமராஜ் இயக்கி, தயாரித்து, நடித்து கடந்த வருடம் செப்டம்பர் 24-ம் தேதி தியேட்டர்களில் வெளியான படம் ‘பிறர்தரவாரா.’சிட்டிக்குள் குழந்தைகள் கடத்தப்பட, அதற்கு காரணமான குற்றவாளிகளை போலீஸ் அதிகாரி காமராஜ் எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படத்தின் கதைக்களம். குற்றவாளிகள் யார் என்பதில் ஆரம்பம் முதல் இறுதிவரை சஸ்பென்ஸ் வைத்து படத்தை விறுவிறுப்பாக நகர்த்திச் செல்லும் விதத்தில் திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது.

சம்பத் ராம், ருத்ரன், அபு, ஹரி, புருஷ், சேகர், ராஜன், நிவேதா லோகஸ்ரீ மற்றும் பலர் நடித்திருந்த இந்த படம வெளியானபோது ஊடகங்களில் விமர்சனங்களால் பாராட்டுக்களைப் பெற்றது. ரசிகர்களிடமும் கணிசமான வரவேற்பை பெற்றது.

இந்த படம் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு தினத்தில் மூவி வுட் (Movie Wood) ஓடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.

படக்குழு:-
ஒளிப்பதிவு – டேவிட் & கோகுல்
படத்தொகுப்பு – ஹரிபிரசாத்
இசை – ஜாக் வாரியர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here