தன்னை காதலிக்காவிட்டாலும் வேறு ஒருவரை காதலிப்பதை பெருமையாக நினைக்கும் காதலி, தன் சகோதரி மகளின் வாழ்க்கையை மேம்படுத்த பாடுபடும் மாமனின் கருணை உள்ளம் என காதல், சென்டிமென்ட் கலவையாக குடும்பப்பாங்கான கதைக்களத்தில் உருவாகியுள்ள படமே ‘பாசக்கார பய.’
காயன்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விக்னேஷ் கதாநாயகனாக நடிக்க, காயத்திரி கதாநாயகியாக நடித்துள்ளார். மற்றொரு கதாநாயகனாக பிரதாப் நடிக்க கஞ்சா கருப்பு, தேனி முருகன் ஆகியோர் நடித்துள்ளனர். 
விவேக பாரதி கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கும், இந்த படத்தில் செளந்தர்யன் இசையில் ஐந்து பாடல்கள் இடம்பெற்றுன.
‘சிஞ்சனக்கன செனச்சனக்கன கிழிஞ்சது வேட்டி…’ என்ற பாடல் குத்தாட்டம் போடவைக்கும் என்கிறது படக்குழு.
தஞ்சை, மயிலாடுதுறை காவிரி டெல்டா பகுதியை அற்புதமாக படம்பிடித்துள்ளார் ஒளிப்பதிவாளர் கே.வி.மணி. மக்கள் தொடர்பாளராக வெங்கட் பணிபரிகிறார்.
இந்த படம் வரும் ஜனவரி 14 பொங்கல் தினத்தன்று வெளிவருகிறது.

