எதிர்பார்ப்பைத் தூண்டும் ‘த ஸ்டீலர்’ படத்தின் டிரெய்லர்! புதுமுக இயக்குநர் ஜெகதீஸ் கண்ணா அசத்தல்!

 

த ஸ்டீலர்‘ படத்தை தயாரித்து, இயக்கியிருப்பவர் ஜெகதீஸ் கண்ணா. இவர் இயக்குனர் ராஜிவ் மேனனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். ஜெகதீஷ் கண்ணாவுக்கு மேடை நாடக நடிகர் என்ற அடையாளமும் உண்டு. நாலு பேருக்கு நல்லதுன்னா, எதுவும் தப்பில்ல’, திரைகடல்’ உள்ளிட்ட படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். இவர் நாடக்கலை மூலம் வானியல் மற்றும் விமான அறிவியலை கற்பிக்கும் நிறுவனமான வாயு சாஸ்திரா’வின் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்க செய்தி!

தன் வாழ்வில் நடந்த லேப்டாப் திருட்டு சம்பவத்தை மையமாக வைத்து எழுதிய கதை. திருட்டு நடந்த நேரம் எட்டு நண்பர்கள் வீட்டில் இருந்தனர். போலீஸ் எட்டு பேரையும் விசாரிக்க. அதை பார்த்த ஜெகதீஸ் கண்ணாவின் மனதில் கதையின் கரு உருவானது. அந்த சம்பவத்தை ஒரு கார்பரேட் ஆபீஸில் நடப்பது போல் மாற்றி, ரோசமோன் படம் போல் பெர்ஸ்பெக்டிவ் திரைக்கதை வடிவில் இப்படத்தை தயாரித்து முடித்தார் ஜெகதீஸ் கண்ணா.

ஜெகதீஸ் கண்ணாவின் நண்பர்கள் மாஸ்டர், டாக்டர் புகழ் பியான் சரோ, மற்றும் துப்பறிவாளன், சைக்கோ படத்தின் எடிட்டர் அருண் இசை மற்றும் எடிட்டிங்கில் பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள்.

ஜெகதீஸ் கண்ணா மேடை நாடகத்துறை சார்ந்தவர் என்பதால், விக்னேஸ், சிவா, கோபிநாத், பொன்னி, ஶ்ரீனிவாஸ், ஹர்சிதா உள்ளிட்ட திறமை வாய்ந்த நடிகர்கள் சிரமமின்றி கிடைத்தனர். தனது ஆபீஸில் முழு படத்தை எடுக்க ஐஐடி ரிசர்ச் பார்க்கும் உதவி செய்ய படம் நிறைவடைந்தது. படப்பிடிப்புக்கு பிறகான போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிய ஆறு மாதங்கள் ஆனது.

படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்கள் அமையாத நிலையில் ஜெகதீஸ் கண்ணா தானே சிறு பட்ஜெட்டில் படத்தை தயாரித்தார். படம் முடிந்து ரிலீஸ் சம்பந்தமாக பல்வேறு படத் தயாரிப்பு நிறுவனங்களை அணுகி, நான்கைந்து மாதகால முயற்சித்தும் சரியான வாய்ப்பு அமையாததால் ஜெகதீஸ் கண்ணா தனது வாயுசாஸ்திரா சேனலில் படத்தின் டிரெய்லரை ரிலீஸ் செய்துள்ளார். அதற்கு நல்ல நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

ஜெகதீஸ் கண்ணா போன்ற திறமையாளர்களை திரையுலகத்தினர் குறிப்பாக தயாரிப்பாளர்கள் ஊக்குவித்தால் நல்ல படங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here