யோகிபாபு நடிப்பில் ‘பன்னி குட்டி.’ படத்தை வெளியிட லைகாவுடன் கை கோர்க்கும் 11:11 புரொடக்ஷன்ஸ்!

யோகிபாபு நடித்து, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் ‘பன்னிக்குட்டி’  படத்தை 11:11 புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது.

தரமான திரைப்படங்களை வழங்கி வரும், இரண்டு தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்துள்ளது படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.

அது குறித்து 11:11 புரொடக்ஷன்ஸ் நிறுவன இயக்குநர் மற்றும் இணை தயாரிப்பாளர் ஷ்ருதி திலக் பேசும்போது,
எங்கள் தயாரிப்பு நிறுவனம் பன்னிக்குட்டி’ படத்தின் தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா வெளியீட்டிற்கு, லைகாவுடன் இணைவதில் மிகுந்த பெருமை கொள்கிறோம்.

ரசிகர்களின் விருப்பத்தை நிறைவு செய்யும் தரமான பொழுதுபோக்கு படைப்புகளை அளிக்கும் நோக்கில் முழுக்க முழுக்க காமெடி சரவெடியாக பன்னி குட்டி திரைப்படத்தை திரைப்பட ரசிகர்களுக்கு அளிப்பது மகிழ்ச்சி. குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக திரையரங்கு சிரிப்பு மழையில் நனையும் எனபதை உறுதியாக நம்புகிறோம். பன்னி குட்டி திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு சிறப்பான அனுபவமாக இருக்கும்.

படத்தை அனுசரண் இயக்கியுள்ளார். படத்தில் கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார் மற்றும் சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார், மேலும் இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். சண்டைப்பயிற்சி இயக்கத்தை ஃபயர் கார்த்திக் செய்ய, எம்.ஆர். ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here