அறிமுக இயக்குநர் ரா. பரமன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்.‘ சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடிக்க, காளி வெங்கட், ரித்விகா முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
கே. கே. ஆர் சினிமாஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே. கே. ரமேஷ் தயாரித்திருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியிருக்கிறது. இதனை ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இணைந்து வெளியிட்டனர். படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில்,”தமிழ் திரை உலகில் அரசியலை மையப்படுத்தி திரைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அரசியல் தலைவர்களை பற்றிய திரைப்படங்களும் வெளியாகி இருக்கிறது. முதன்முறையாக அரசியல் கட்சியில் பணியாற்றும் தொண்டர்களை பற்றிய படமாக ‘சமுத்திரக்கனியின் பப்ளிக்’ உருவாகி இருக்கிறது” என்றார்.
படத்தின் பாடல்களை யுகபாரதி எழுத, டி. இமான் இசையமைத்திருக்கிறார். ராஜேஷ் யாதவ் மற்றும் வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்தின் எடிட்டர் கே. எல். பிரவீன்.
ஃபர்ஸ்ட் லுக், சினிமா ரசிகர்களைக் கவர்ந்திருப்பதால் படக்குழு உற்சாகத்தில் மிதக்கிறது.