பாரம்பரிய இனிப்பு, காரம், புத்தம்புதிய சுவையில் தின்பண்டங்கள்… இயற்கை முறையில் உருவாக்கம், இணையம் மூலம் விற்பனை… அசத்தும் Welcome Annachi !

பாரம்பரிய இனிப்பு, காரம், புத்தம்புதிய சுவையில் தின்பண்டங்கள்இயற்கை முறையில் உருவாக்கம், ஆன்லைனில் விற்பனைஅசத்தும் Welcome Annachi !

By சு. கணேஷ்குமார், 99415 14078

தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது Welcome Annachi என்ற நிறுவனம். முழுக்க முழுக்க இயற்கை முறையில் உணவுப் பொருட்களை தரமாகத் தயாரிப்பது இந்த நிறுவனத்தின் தனித்துவம்!

கே ஜெ மேன்லி

லாபகரமான தொழிலாக இருக்க வேண்டும்; அது மக்களின் நலனுக்கு உகந்ததாக இருக்க வேண்டும்‘ என்ற நோக்கத்தில் இந்த நிறுவனத்தை நடத்திவருகிறார் திரு. கே ஜெ மேன்லி.

உணவுப் பொருட்கள் தேவைப்படுவோர் வெல்கம் அண்ணாச்சி நிறுவனத்தின் https://www.facebook.com/groups/2601458676742686/ ஃபேஸ்புக் பக்கம் மற்றும் 88832 22223 என்ற வாட்சப் எண்ணில் ஆர்டர் செய்யலாம். பொருட்கள் மிகவும் பாதுகாப்பான முறையில், நேர்த்தியாக பார்சல் செய்யப்பட்டு, கொரியர் மூலம் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடும்!

நெய் அல்வா, மஸ்கோத் அல்வா, முந்திரி அல்வா, ப்ரூட் அல்வா, டேட்ஸ் அல்வா, கருப்பட்டி அல்வா, தேங்காய்பால் பர்பி, காயல்பட்டினம் தம்மடை, கருப்பட்டி தம்மடை, நெய் பட்டர் பிஸ்கெட், ஓட்டு மாவு, அத்தி அல்வா, தாமிரபரணி நெய் அல்வா, பூசணி பேடா , மனோகரம், புதினா மிக்சர், திருநெல்வேலி மிக்சர், தேங்காய்பால் சீவல், திருச்செந்தூர் சீவல், மிளகு காரசேவு, மிளகு முறுக்கு, எள்ளு முறுக்கு, ஆந்திரா முறுக்கு, நாட்டுபசும்பால் பால்கோவா, ஸ்ரீவில்லிப்புதூர் பால்கோவா, நாகர்கோவில் நேந்திரம் சிப்ஸ், கைசுற்று முறுக்கு, அதிரசம், முந்திரிகொத்து என வெல்கம் அண்ணாச்சியின் தயாரிப்புகளின் லிஸ்ட் ரொம்…….பவே பெரிது.

பீட்ரூட், கேரட் உள்ளிட்ட காய்களைக் கொண்டு உருவாக்கப்படுகிற முற்றிலும் புதுமையான மைசூர்பாக்.., விதவிதமான சுவையில் கேக் வகைகள், முந்திரி, திராட்சை உள்ளிட்ட முதல்தர உலர் பழங்கள் – தானியங்கள்.., ‘தாய்க்கிழவி மசாலா‘ என்ற பெயரில் சாம்பார் மசாலா, கறிக்குழம்பு மசாலா, மருந்துக் குழம்பு மசாலா.., கருப்பட்டி, பனங்கற்கண்டு.., வாகை மரச்செக்கில் பிழிந்த சமையல் எண்ணெய் வகைகள், கருப்பட்டி சேர்த்து செக்கில் பிழிந்த ஸ்பெஷல் நல்லெண்ணெய், சிறுதானிய சேமியா வகைகள் என வரிசை கட்டும் தயாரிப்புகளுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா முழுவதும், உலகின் பல நாடுகளிலும் வாடிக்கையாளர்கள் பெருகியிருப்பது வெல்கம் அண்ணாச்சி நிறுவனத்தின் சுவை மற்றும் தரத்திற்கான சான்று!

தேன்மிட்டாய், கமர்கட், கடலைமிட்டாய் என அந்தக்கால தின்பண்டங்களையும் வெல்கம் அண்ணாச்சி நிறுவனம் தயாரித்து வழங்கி வருகிறது!

கிருஷ்ணர் வேடப் போட்டி, வேட்டி தினப் போட்டி, மார்கழி கோலப் போட்டி என சீசனுக்கேற்ப போட்டிகள் அறிவித்து, கலந்துகொள்வோரில் தகுதியானவர்களுக்கு பரிசுகள் தந்து வாடிக்கையாளர்களை ஊக்குவிப்பதையும் தொடர்கிற வெல்கம் அண்ணாச்சி நிறுவனம், கருவாடு விற்பனையிலும் வாடிக்கையாளர்களை தக்க வைத்திருக்கிறது.

பல்வேறு பிரிவுகளில் பண முதலீட்டுத் திட்டம் அறிவித்து ஆர்வமுள்ளோரை இணைப்பதும், வாடிக்கையாளர்களை சுற்றுலா அழைத்துச் சென்று மகிழ்விப்பதும் வெல்கம் அண்ணாச்சியின் இன்னபிற செயல்பாடுகள்!

இயற்கைப் பேரிடர் காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு உதவுவதிலும் ஈடுபாடு காட்டுகிறது வெல்கம் அண்ணாச்சி நிறுவனம்!

வெல்கம் அண்ணாச்சியின் 88832 22223 இந்த எண்ணிற்கு போன் செய்து ஹலோ என்று மட்டும் சொன்னால் போதும்; அதே வாட்சப் எண்ணிற்கு வெல்கம் அண்ணாச்சி என்று மட்டும் மெசேஜ் அனுப்பினால் போதும் என அவ்வப்போது சுவாரஸ்யமான போட்டிகளையும் அறிவிக்கிறது வெல்கம் அண்ணாச்சி நிறுவனம். குறிப்பிட்ட நேரத்தில் அந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவோருக்கு வெல்கம் அண்ணாச்சியின் தயாரிப்புகள் இலவசமாக வீடு தேடி வரும். வெல்கம் அண்ணாச்சியின் ஃபேஸ்புக் பக்கத்தை தொடர்கிறவர்கள் இந்த சுவையான வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்!

பொங்கலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் வெல்கம் அண்ணாச்சியின் ஸ்பெஷல் ஆபர்களுக்காக வாடிக்கையாளர்கள் வெயிட்டிங்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here