ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வென்ற நித்யா, வித்யா இரட்டையர்கள்! ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ செண்பகமூர்த்தி நிதியுதவி வழங்கி ஊக்குவிப்பு!

கோவையைச் சார்ந்த ஏழ்மைக் குடும்பத்து வாரிசுகளான வித்யா, நித்யா இரட்டையர்கள் சிறு வயதிலிருந்தே விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபட்டு பாராட்டுக்களை பெற்று வருகிறார்கள். அவர்களின் திறமையறிந்து சென்னை மாவட்ட  மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர் எம்.செண்பகமூர்த்தி, இருவரையும் ஊக்கப்படுத்தி உதவிகள் செய்து வருகிறார். ஆசிய போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்வதற்குத் தேவையான காலணி முதல் பல பரிசுகளை வழங்கியுள்ளார்.

சீனாவில் நடந்த ஆசிய போட்டியில் வித்யா 400 மீட்டரில் தங்கப்பதக்கம் வாங்கி சாதித்ததுடன் மேலும் பல சாதனைகள் செய்துள்ளார். நித்யா 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் போட்டியில் கலந்துகொண்டு வெண்கலப் பதக்கமும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் மற்றும், 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் பெற்று சாதனை செய்துள்ளார்.

ஆசிய போட்டிகளில் மட்டுமல்லாது தேசிய அளவிலான போட்டிகளிலும் தமிழகம் சார்பில் இந்த இரட்டையர்கள் கலந்துகொண்டு, பல சாதனைகள் படைத்து வருகிறார்கள். சமீபத்தில் தேசிய அளவில் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொண்ட நித்யா 56.01 நொடிகளில் ஓட்ட தூரத்தை கடந்து, சாதனை செய்துள்ளார். மேலும் ஓட்டப்பந்தய உலக சாதனை வீராங்கனை பி டி உஷா செய்த சாதனையை வித்யா சமன் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க செய்தி.

இந்த நிலையில் சாதனைகள் படைத்த வீராங்கனைகளை அழைத்துப் பாராட்டியதுடன் நிதியுதவி வழங்கி, விளையாட்டுப் போட்டிகளுக்குக்குத் தேவையான உபகரணங்களையும் பரிசாக வழங்கி ஊக்கப்படுத்தியுள்ளார் செண்பகமூர்த்தி.

‘தொடர்ந்து ஏழ்மை நிலையில் உள்ள விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு எப்போதும் தாங்கள் உதவுவோம்’ என்றும் தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here