‘ஆத்தா உன் கோவிலிலே’, ‘தமிழ் பொண்ணு’, ‘மிட்டா மிராசு’ ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்த ரவி ராகுல், இப்போது, ‘ரவாளி’ படத்தை இயக்கியுள்ளார்.

சிவரத்தா என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்.சித்தார்த் கதாநாயகனாக நடிக்க, பாம்பே தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் நைரசா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், ரியாஸ் கான், பப்லு, கஞ்சா கருப்பு, அப்புக்குட்டி, சுஜாதா, ஆத்மா ஆகியோர் நடித்துள்ளனர்.
ஏழை பையனை பணக்கார பெண் காதலிக்கிறாள். வீட்டில் எதிர்ப்பு வர, வெளிமாநிலம் இழுத்துச் சென்று, கோவிலில் திருமணம் செய்கிறாள். தாலி கட்டிய கையோடு வேலை தேடி வெளியே சென்ற காதலன் காணாமல் போகிறான். அவனை தேடுவது தான் மீதி கதை.
இந்த படம் குற்றாலத்தில் தொடங்கி, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய ஊர்களில் படப்பிடிப்பு நடத்தி, இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது என்கிறார் இயக்குனர் ரவி ராகுல்.
படக்குழு:-
கதை, திரைக்கதை இயக்கம் – ரவி ராகுல்
ஒளிப்பதிவு – வினோத் குமார்
இசை – ஜெய் ஆனந்த், ஏ.எஸ்.மைக்கேல் யாகப்பன்
எடிட்டிங் – வளர் பாண்டியன்
பாடல்கள் – இளைய கம்பன், கு.கார்த்திக்
நடனம் – சந்திரிகா
சண்டைக் காட்சி – ஹரி முருகன்
மக்கள் – தொடர்பு கோவிந்தராஜ்