பரபரப்பாகத் தயாராகும் சூரி நடிப்பில், வெற்றிமாறன் இயக்கும் ‘விடுதலை.’ விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சூரி நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பரபரப்பாகத் தயாராகி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள படம் ‘விடுதலை.’

பிரமாண்டமாக உருவாகியுள்ள விடுதலை படத்தில் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கவுதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

விண்ணைத்தாண்டி வருவாயா’, கோ’ உள்ளிட்ட பிளாக்பஸ்டர் வெற்றிகளைத் தந்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் (Red Giant Movies) உதயநிதி ஸ்டாலின், ஆர்.எஸ். இன்ஃபோடெய்ன்மெண்ட் (RS Infotainment) எல்ட்ரெட் குமார் இருவரும் இணைந்து ‘விடுதலை’ படத்தை வழங்குகிறார்கள். இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரவிருக்கிறது.

இத்திரைப்படம் ஏற்கனவே அதன் பிரமாண்டமான தயாரிப்பு மற்றும் நம்பிக்கைக்குரிய நட்சத்திர நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களுடன் திரை ஆரவலர்களிடையே பெரியளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. மேலும், ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியீடு என்பது தற்போது பல படங்களுக்கு வெற்றியின் முகவரியாக மாறியிருப்பதால், விடுதலை படமும் பெரும் வெற்றியாக அமையுமென தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமார் நம்புகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here