ஆதரவற்றோரின் திறமையுணர்ந்து வாய்ப்பு கொடுத்தால் அவர்களாலும் சாதிக்க முடியும் என்பதை சொல்லும் படம் இது! -ரெக்கார்ட் பிரேக் பட விழாவில் ஜெயசுதாவின் மகன் நிஹார் பேச்சு

நடிகை ஜெயசுதாவின் மகன் நிஹார், நாகர்ஜூனா, ராக்தா இஃப்திகர் நடித்திருக்கும் படம் ‘ரெக்கார்ட் பிரேக்’ திரைப்படம் வரும் மார்ச் 8 அன்று, 8 மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது. முன்னதாக தமிழ் பதிப்பின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர், தயாரிப்பாளர் சத்லவாதா ஸ்ரீனிவாஸ்ராவ் பேசியபோது, ”அப்பா, அம்மா என யாரும் இல்லாத கதாநாயகன் சிறுவயதிலிருந்து கிடைக்கும் வேலைகளை கஷ்டப்பட்டு செய்து வருகிறான். ஆனால், அவன் வளர்ந்து ஒரு விளையாட்டு ஆர்வத்துடன் போகும் பொழுது என்ன நடக்கிறது என்பதுதான் கதை. மனிதர்களாக நாம் அனைவரும் இங்கு சமம். படத்தின் கதை மீது எனக்குப் பெரிய நம்பிக்கை உண்டு. அதை நீங்கள் திரையரங்குகளில் பார்க்கும்போது உணர்வீர்கள். இந்த படத்தை எனக்கு பிடித்த தமிழ் மக்களுக்கும் காட்டுவது ரொம்ப சந்தோஷம். மார்ச் எட்டு அன்று திரையரங்குகளில் பார்த்துவிட்டு சொல்லுங்கள்” என்றார்.

நடிகர் நிஹார் பேசியபோது, ”இது என்னுடைய இரண்டாவது படம். கடந்த ஐந்து வருடங்களாக இந்த படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். விஎப்எக்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்துள்ளது. உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இந்த படத்தை பார்க்க வேண்டும் என விரும்புகிறோம். அதனால் தான் தெலுங்கு உட்பட எட்டு மொழிகளில் இந்த படத்தை டப்பிங் செய்திருக்கிறோம். பெரிய திரையில் பார்க்கும்பொழுது அதன் அனுபவத்தை உங்களால் உணர முடியும். யாரும் இல்லாதவர்களுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நிச்சயமாக அவர்களால் சாதிக்க முடியும் என்பதை இந்த படத்தில் சொல்லி இருக்கிறோம். உங்களுக்கும் படம் பிடிக்கும்” என்றார்.

நடிகர் நாகர்ஜூனா, ”இது எனக்கு முதல் படம். இந்த வாய்ப்புக் கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இந்தப் படம் தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டுமல்ல, தமிழ் ரசிகர்களுக்கும் மிகவும் பிடிக்கும் என்ற நம்பிக்கை உண்டு. படம் பார்த்து நிச்சயம் மகிழ்வீர்கள்” என்றார்.

நடிகை ராக்தா, ”நான் முதல் முறையாக சென்னைக்கு வந்திருக்கிறேன். இந்த படம் ஒரு சிறந்த கருத்தை பேசி இருக்கிறது. தெலுங்கு பார்வையாளர்கள், தமிழ் பார்வையாளர்கள் மட்டுமில்லாமல் எல்லோருக்குமான பான் இந்தியா படமாக உருவாகியிருக்கிறது” என்றார்.

இயக்குநர் அஜய்குமார், ”படத்தின் இயக்குநர் லவ் ஜானர், ஃபேமிலி ஜானர், க்ரைம் த்ரில்லர் என எதற்குள்ளும் இதை அடக்க முடியாத புதிய கான்செப்ட்டோடு வந்திருக்கிறார். படம் பார்க்கும்போது உங்களுக்கு புரியும்” என்றார்.

தயாரிப்பாளர், நடிகர் பிரசன்னா குமார், ”மார்ச் 8 மகா சிவராத்திரி மற்றும் பெண்கள் தினம். அதற்கேற்றார் போல ஆன்மீகம் மற்றும் பெண்களுக்கு வலுவான கன்டென்ட் இந்த படத்தில் உள்ளது. அம்மா செண்டிமெட்ண்ட் மற்றும் விவசாயிகள் பிரச்சினையும் இதில் பேசப்பட்டுள்ளது. ரெஸ்லிங்கில் எப்படி ஹீரோ போட்டிப் போட்டு எதிர்நாடான சீனா, பாகிஸ்தானை ஜெயிக்கிறான் என்பதுதான் கதை. படம் நிச்சயம் ஹிட் ஆகும்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here