அப்பா மகன் உறவு சார்ந்த படங்கள் தோல்வியடைந்ததாக சரித்திரமில்லை; இந்த படமும் கட்டாயம் வெற்றி பெறும்! -‘ராமம் ராகவம்’ பட விழாவில் நடிகர் சூரி பேச்சு

அறிமுக இயக்குநர் தன்ராஜ் கொரனானி இயக்கத்தில், பிருத்தவி போலவரபு தயாரிப்பில் சமுத்திரகனி நடித்திருக்கும் ‘ராமம் ராகவம்’ படத்தின் டீசர் வெளியீட்டு விழா 27.4.2024 அன்று சென்னையில் நடந்தது.

நிகழ்வில் இயக்குநர் தன்ராஜ், ”இந்த நாளுக்கும் என் அப்பா அம்மாவுக்கும் நன்றி. சிவபிரசாத் எழுத்தாளரின் கதை இது. இந்த கதை குறித்து கனி அண்ணனிடம் கூறினேன். கதையை நீயே இயக்க வேண்டும் என்று கூறினார். எனக்கு ஒரு தயக்கம் இருந்தது நான் நடித்த படங்களில் வேலை பார்த்த இயக்குனர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்டதை வைத்து படத்தை இயக்கி இருக்கிறேன்.

சமுத்திரக்கனி அண்ணன் இல்லையென்றால் இந்த படம் உருவாகி இருக்காது. அண்ணனைப் போல நல்ல கதைகள் ஆதரித்து ஊக்கம் அளித்தால் சினிமாவிற்கு நல்ல திரைப்படங்கள் வரும். ஒவ்வொருவரும் தன் அப்பாவோடு வந்து கட்டாயம் இந்தப் படத்தை பாருங்கள்” என்றார்.

சமுத்திரக்கனி பேசியபோது, ”ஒவ்வொரு தகப்பனும் ஒரு சகாப்தம். 10 அப்பா படம் பண்ணிட்டேன் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதை. இதுவும் அப்படியான வேறொரு கதை. தன்ராஜிக்கு தகப்பனும் இல்லை தாயும் இல்லை. தானே உழைத்து இந்த இடத்திற்கு வந்திருக்கிறார்.

அப்பா என்றாலே ஒரு வேதியல் மாற்றம் நிகழும் அப்பா கதை என்றாலே வாங்க கேட்ப்போம் பண்ணுவோம் என்று சொல்லி விடுவேன். வெறும் நம்பிக்கையை மட்டுமே வைத்திருப்பவர்கள் சிறப்பாக படம் பண்ணிடுவாங்க தன்ராஜை அப்படி நம்பி இந்த படத்துக்குள்ள வந்தேன்.

ஒவ்வொரு தகப்பனுக்கும் மகனுக்கும் உள்ள உறவுக்குள் அவ்வளவு சிக்கல்கள் இருக்கு. இன்னும் 10 படம் கூட பண்ணலாம்.

தயாரிப்பாளரை நான் பார்த்ததே இல்லை. படபிடிப்பில்தான் முதல் முறையாம பார்த்தேன். என்னைப் பார்க்காமலே என் மீது நம்பிக்கை வைத்த தம்பி. மாபெரும் உறவோடு வந்து இருக்கிறார் வாழ்த்துகள் தம்பி.

இந்த படத்தை இயக்க தன்ராஜ் வேறொரு இயக்குநரை அழைத்து வந்தார். இந்த படத்தை எடுக்க ஒரு நல்ல இயக்குநரை கொண்டு வாருங்கள் என்றேன். இயக்குனர் கிடைப்பதில் சிக்கல் இருப்பதாகச் சொன்னார் நீயே படம் பண்ணுனு சொன்னேன் இயக்குனராக மாறி இருக்கிறார். இந்தப் படத்திற்கு ஒரு வெளிச்சம் கிடைக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.

இயக்குநர் பாலா, ”சமுத்திரக்கனியின் மாபெரும் ரசிகனாக நான் வந்திருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். நடிகனாக அவர் நிரூபித்து விட்டார். அவருடைய உழைப்பிற்கும் நான் ரசிகன்தான். கடுமையாக உழைக்கக்கூடியவர். மற்றவர்களுக்கு உதவக்கூடிய அவருடைய தன்மை எனக்கு வியப்பாக இருக்கும். உதவுவதில் அவருக்கு பெரிய மனசு இருக்கு. இந்த படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்” என்றார்.

நடிகர் சூரி, ”வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி இங்க ஹிட் ஆனது போல தெலுங்கில் பெரிய ஹிட். அந்த காமெடியை தன்ராஜ்தான் நடித்ததாக சொன்னார். அப்போதிலிருந்து அவர் என்னுடைய நம்பராக அறிமுகமானார்.

அப்பா மகன் உறவு தொடர்பான கதையம்சம் கொண்ட படங்கள் தோல்வி அடைந்ததாக சரித்திரம் இல்லை. இந்தப்படமும் கட்டாயம் வெற்றி பெரும். ஒரு படம் எடுப்பதை விட மக்களிடம் கொண்டு சேர்பதுதான் சிரமமாக இருக்கிறது. இந்த படத்தை மக்களிடம் கொண்டு செல்ல நிறைய சிரமம் எடுத்துள்ளனர். கனி அண்ணன் நெகட்டிவாக பேசினதா நான் கேட்டதே இல்லை.. உங்கள் உழைப்பு இந்தப்படத்திலும் அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன் படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்” என்றார்.

தயாரிப்பாளர் பிருத்தவி போலவரபு, நடிகை மோக்‌ஷா, ஒளிப்பதிவாளர், நடிகர் தீபக், நடிகர் ஹரிஷ், நடிகர் பாபி சிம்ஹா. நடிகர் தம்பி ராமையா உள்ளிட்டோரும் நிகழ்வில் பேசினார்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here