டபுள் டக்கர் வெற்றிக்குப் பிறகு, அடுத்த சக்ஸஸுக்கு ‘பிள்ளையார் சுழி’ போட்ட தீரஜ்!

நடிகர் தீரஜ் நடித்து சமீபத்தில் வெளியான ‘டபுள் டக்கர்’ அனைத்து தரப்பினராலும் குறிப்பாக சிறுவர், சிறுமிகளின் வரவேற்பால் பெரியளவில் வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தீரஜ் ‘பிள்ளையார் சுழி’ என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். அபிநயா கதாநாயகியாக நடித்துள்ளார். ரேவதி, மைம் கோபி, மேத்யூ வர்கீஸ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தர்ஷன், ஜீவா ரவி, பழனி தேவி, ஆர்ஜே மகாலட்சுமி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். குழந்தை நட்சத்திரங்கள் உன்னி கிருஷ்ணன், ஆர்னா, ஃபர்ஹானா, ஸ்ரீ ஷரவண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனோகரன் பெரியதம்பி இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பட வெளியீட்டுக்கான பணிகள் நடக்கிறது. இந்த ஆண்டில் படம் வெளியாகவிருக்கிறது.

முன்னதாக, இந்த படம் நியூயார்க் திரைப்பட விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்டு இறுதிச் சுற்றில் இடம் பிடித்தது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”இது உடல் ஊனமுற்ற ஒரு குழந்தையின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட, சுவாரஸ்யமான, மகிழ்ச்சிகரமான அனுபவத்தை தரக்கூடிய படம்” என்றார்.

‘போதை எறி புத்தி மாறி’, ‘டபுள் டக்கர்’ படங்களில் நேர்த்தியான நடிப்பால் கவர்ந்த தீரஜ், இந்த படத்திலும் அசத்தலான நடிப்பைத் தருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

படக்குழு:-
தயாரிப்பு: சிலம்பரசி வி
இணை தயாரிப்பு: எயர் ஃப்ளிக்ஸ்
ஒளிப்பதிவு: பிரசாத்
இசை: ஹரி எஸ் ஆர்
பாடல் வரிகள்: ரேஷ்மன் குமார், மோகன்ராஜன், கோதை தேவி
படதொகுப்பு: சிலம்பரசி வி
பாடியவர்கள்: சத்திய பிரகாஷ், ராகுல் நம்பியார், சூப்பர் சிங்கர் கௌசிக் ஸ்ரீதரன்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here