இன்வெஸ்டிகேஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக உருவான ‘ரூம் பாய்’ படத்தின் இரண்டாவது லுக்கை ’96’ பட இயக்குநர் பிரேம்குமார் வெளியிட்டு படக்குழுவை வாழ்த்தியுள்ளார்.
சி நிகில் இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகிறார். அரண்மனை 4 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த ஹர்ஷா கதாநாயகியாக நடித்துள்ளார்.
காமெடிக்கு இமான் அண்ணாச்சி, பிர்லா போஸ், யூ டியூபர் காத்து கருப்பு, சாதனா, இன்ஸ்டா கற்பகம் மற்றும் சமீர், சிட்டி ராஜா, அருண்ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின், கீர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மும்பை மாடல் அழகி நிதி மரோலி ஒரு பாடலுக்கு நடனமாடி இருக்கிறார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ள ஜெகன் ராயன் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 2002-ம் ஆண்டு ‘தாத்தா’ என்ற குறும்படத்திற்காக சிறந்த ஒலிப்பதிவிற்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். 50க்கும் மேற்பட்ட ஆவணம்,கார்ப்பரேட் மற்றும் விளம்பர படங்களை இயக்கியவர்.
படம் பற்றி இயக்குநர் ஜெகன் ராயனிடம் கேட்டபோது, ஃபேமிலி சென்டிமென்ட் கலந்த இன்வெஸ்டிகேஷன் மற்றும் சஸ்பென்ஸ் திரில்லராக உருவாக்கி இருக்கிறோம். விறுவிறுப்பான திரைக்கதை நிச்சயம் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் விதமாக இருக்கும்.
படப்பிடிப்பு இயற்கை எழில் கொஞ்சும் திருப்பத்தூர், ஏலகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்றது. பாடல் காட்சிகளின் படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்றது.
இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது டிசம்பர் மாதத்தில் திரையரங்குகளில் படத்தை வெளியிட இருக்கிறோம் என்றார்.
இந்த படத்தின் முதல் பார்வையை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி வெளியிட்டிருந்தார். அது இணையதளங்களில் பல லட்சம் பார்வையாளர்களை கடந்து பார்க்கப்பட்டது!
இயக்குநர் ஜெகன் ராயன் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர். 2002-ம் ஆண்டு ‘தாத்தா’ என்ற குறும்படத்திற்காக சிறந்த ஒலிப்பதிவிற்கான தமிழக அரசின் விருதைப் பெற்றவர். 50க்கும் மேற்பட்ட ஆவணம்,கார்ப்பரேட் மற்றும் விளம்பர படங்களை இயக்கியவர்.

