இந்த படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களுக்கானது! -தான் இயக்கி தயாரிகக்கும் றெக்கை முளைத்தேன் படம் பற்றி சொல்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்

தான்யா ரவிச்சந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க, எஸ் ஆர் பிரபாகரன் இயக்கி, தனது ஸ்டோன் எலிஃபேண்ட் கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம் ‘றெக்கை முளைத்தேன்.’

படத்தை கடந்த வாரம் பார்த்த தணிக்கை குழுவினர், இது இன்றைய இளைஞர்களுக்கான திரைப்படம் என பாராட்டி U/A சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டதற்கு, ”இது நான் சொந்த நிறுவனம் துவங்கி தயாரிக்கும் முதல் திரைப்படம். எனது முதல் தயாரிப்பு என்பதால் நானே கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறேன். படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களுக்கானது.

படத்தின் மிக முக்கிய கதா பாத்திரத்தில் கிரைம் பிராஞ்ச் அதிகாரியாக தான்யா ரவிச்சந்திரனும், முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயபிரகாஷ், ஆடுகளம் நரேன், கஜராஜ், ஜீவாரவி, மீரா கிருஷ்ணன் நடிக்க ஐந்து புதுமுகங்களை அறிமுகம் செய்கிறேன். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் வெளியாகும்” என்றார்.

படக்குழு:-

பின்னணி இசை: தரண்குமார்ற்

பாடல்களுக்கு இசை: தீசன்

ஒளிப்பதிவு: கணேஷ் சந்தானம்

படதொகுப்பு: பிஜு டான் போஸ்கோ

நிர்வாக தயாரிப்பு: கார்த்திக்துரை

இணை தயாரிப்பாளர்கள்: ஏ.முனிஸ்வர், கே.தீரா

மக்கள் தொடர்பு: ஷேக்

இந்த படம் முழுக்க முழுக்க கல்லூரி இளைஞர்களுக்கானது! -தான் இயக்கி தயாரிகக்கும் றெக்கை முளைத்தேன் படம் பற்றி சொல்கிறார் எஸ்.ஆர்.பிரபாகரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here