நிறைவடைந்தது ஜோ பட ஜோடி மீண்டும் இணைந்த படத்தின் படப்பிடிப்பு!

ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ, மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடித்த படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதங்களுக்கு முன்பாகத் தொடங்கி, திட்டமிட்டபடி முடித்து அசத்தியுள்ளது படக்குழு.

திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லும், ரொமான்ஸ் காமெடி ஜானரில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படைப்பாக புதுமுக இயக்குநர் ‘பிளாக்‌ஷிப்’ கலையரசன் தங்கவேல் இயக்கியுள்ளார். படத்தில் பிளாக்‌ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், ஸ்டில்ஸ் பாண்டியன், ஜென்சன் திவாகர் , ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் போஸ்ட் புரொடக்சன் பணிகளை துவக்கியுள்ளது. விரைவில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் வெளியாகவிருக்கிறது.

மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு , சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு , சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணி இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளது. S2 மீடியா சதீஷ்குமார் மக்கள் தொடர்பு பணிகளைக் கவனிக்கிறார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here