இயக்குநர் டூ நடிகர்… ஆறு படங்களில் அசத்தலான கதாபாத்திரங்கள்… படு பிஸியான ரெமோ சிவா!

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள் நடிகர்களாக மாறுகிற வரிசையில் இணைந்திருக்கிறார் ‘கல்லூரிக் காலங்கள்’ படத்தை இயக்கிய ரெமோ ஷிவா.

மாஸ்டர் தினேஷ், யோகிபாபு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘லோக்கல் சரக்கு’ படத்தில் மெயின் வில்லனாக நடித்திருந்தார். அந்த கதாபாத்திரம் தனியாக பேசப்பட்டது. முன்னதாக விமல் நடித்து வெளியான ‘தெய்வமச்சான்’ படத்தில் விமலுக்கு அண்ணனாக குணச்சித்திர நடிப்பில் அசத்தியிருந்தார்.

தற்போது ‘ரேணிகுண்டா’, ‘கருப்பன்’ பட இயக்குநர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகிவரும் திரைப்படத்தில் மிகமிக வித்தியாசமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தவிர முக்கிய இயக்குநர்களின் ஆறு படங்களில் தமிழ் சினிமாவே திரும்பி பார்க்கும் முக்கியமான பல்வேறு கதாபாத்திரங்களிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். பல முன்னணி இயக்குனர்கள் நடிகர்களின் படங்களில் நடிப்பதற்கான பேச்சுவார்த்தையும் நடந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here