‘ஜெயிலர்’ படத்தின் பாடலிலிருந்து உருவான தலைப்பு… சூப்பர் ஸ்டாரை சந்தித்து வாழ்த்து பெற்ற ‘ரத்தமாரே’ படக்குழு!

‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் இடம்பெற்ற பாடல்களில் ஒன்று ‘ரத்தமாரே ரத்தமாரே.’ பாடலில் இடம்பெற்ற அந்த ‘ரத்தமாரே’ என்ற சொல் தினேஷா ரவிச்சந்திரன் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படத்தின் தலைப்பாகியிருக்கிறது.

லிவிங்ஸ்டன், வையாபுரி, அம்மு அபிராமி, பிரசாத், ரமா, ஜனனி, அசார், மகிமா, ஸ்ரீஜித் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”அச்சம், மடம் , பயிர்ப்பு என்ற மூன்று நிலைகளில், மனிதர்கள் வாழ்வில் மூன்று கோணங்களில் நடக்கும் சம்பவங்களை, அடர்த்தியான திரைக்கதையைக் கொண்டு இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இயங்கி வருகிறோம்.

என் வாழ்வில் நான் பார்த்த என்னை பாதித்த, இந்த சமூகத்தில் மாறவேண்டிய , மாற்றவேண்டிய சில முக்கிய சம்பவங்களை இதில் அழுத்தமாக பதிவு செய்துள்ளேன். இந்த படத்தின் மூலம் அது மாறும் என்றும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.

ரத்தமாரே தலைப்பிற்காக மரியாதை நிமித்தமாக சூப்பர் ஸ்டார் ரஜினி சாரை நேரில் சந்தித்து வாழ்த்துகளைப் பெற்றோம். அது எங்கள் படக்குழுவினருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நினைக்கிறோம்” என்றார்.

படத்தை டி டி எஸ் ஜெர்மனி ஃபிலிம்ஸ், வி2 கிரியேசன், நியூ ஜெர்ஸி என்ற பட நிறுவனங்கள் சார்பில், ஈழம் மற்றும் இந்திய தமிழர்கள் 13 பேர் இணைந்து கிரவுட் பண்டிங் முறையில் தயாரித்துள்ளனர்.

படக்குழு:-

வசனம்: ஹரிஷ் நாராயண், பொன். பார்த்திபன், டான் அசோக்.
ஒளிப்பதிவு: சந்தோஷ் ரவிச்சந்திரன்
இசை: விபின். ஆர்
பாடல்கள்: கபிலன், பிரேம்சந்த்
எடிட்டிங்: ஹரி சங்கர், சக்தி சரண், ஜிஜேந்திரன்.
கலை இயக்கம்: குணசேகர்.டி
தயாரிப்பு மேற்பார்வை: ஏ சி சார்லஸ்
மக்கள் தொடர்பு: புவன் செல்வராஜ்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here