நிஜ ரேஸ் வீரர்களுடன் நடித்த ஹீரோ! எதிர்பார்ப்பைக் கூட்டும் ‘ரேசர்.’

சதீஷ் (எ) Satz Rex என்பவர் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ரேசர்.’தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனையை மையமாக கொண்டு உருவாகியிருக்கும் இந்த படம் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார் அகில் சந்தோஷ். விஜய் டி.வி. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கும் லாவண்யா கதாநாயகியாக நடிக்கிறார். ஆறுபாலா, ‘திரௌபதி’ சுப்ரமணியன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.படத்தின் ஹீரோ நடுத்தர குடும்பத்தில் பிறந்தாலும் பெரிய பைக் ரேசர் ஆகவேண்டும் என்ற லட்சியத்துடன் இருக்கிறார். அவர் கேட்கும் விலை உயர்ந்த ரேஸ் பைக்கை தந்தையால் வாங்கித் தர முடியவில்லை. ஆனாலும், தனது லட்சியத்தில் பின்வாங்காத ஹீரோ தானே கஷ்டப்பட்டு பைக் வாங்கி ரேஸில் சாதிக்க முயற்சிக்கிறார். அதில் அவர் சந்திக்கும் போராட்டங்கள் அதை மீறி அவரால் சாதிக்க முடிந்ததா என்பதை விறுவிறுப்புடன் படம் விளக்குகிறது. இதற்கிடையில் மெல்லிய காதல் கதையும் இழையோடுகிறது.இந்த படத்துக்காக பாண்டிச்சேரியில் பெரும் பொருட் செலவில் பைக் ரேஸ் நடக்கும் பந்தய மைதானம் அமைக்கப்பட்டது. இந்த போட்டியின் முக்கிய காட்சிகள் ஏற்காட்டில் படமாக்கப்பட்டது.மோட்டார் ரேஸ் காட்சிகளில் நிஜ ரேஸ் வீரர்களுடன் ஹீரோ அகில் போட்டிபோட்டு பைக் ஓட்டி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். சில முக்கிய காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தை ‘ஹஸ்ட்லர்ஸ் என்டர்டெயின்மென்ட்’ (Hustlers Entertainment) பட நிறுவனம் சார்பில் கார்த்திக் ஜெயாஸ் அதிக பொருட்செலவில் தயாரித்திருக்கிறார்.

‘ரெடால் மீடியா ஒர்க்ஸ்’ சந்தோஷ் கிருஷ்ணமூர்த்தி இணை தயாரிப்பாளராக பங்களிப்பு செய்திருக்கிறார்.
இந்த படம் லட்சியத்துடன் வாழும் ஒவ்வொரு இளைஞனுக்கும் தன்னம்பிக்கை தரும் விதத்தில் உருவாகியிருப்பதாக படக்குழு நம்பிக்கை தருகிறது.

படம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. படத்தை ‘ஆக்‌ஷன் ரியாக்‌ஷன்’ ஜெனீஷ் வெளியிடுகிறார்.

படக்குழு:-
ஒளிப்பதிவு – பிரபாகர்
இசை – பரத்
கலை – கனியமுதன்
சண்டை காட்சிகள் – சீனு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here