சமுத்திரகனி நடிக்க, தம்பி ராமையாவின் மகன் இயக்கும் ‘ராஜா கிளி’க்கு சென்சாரில் யு/ஏ. விரைவில் டிரெய்லர் வெளியீடு!

நடிகர் தம்பி ராமையாவின் மகனும் நடிகருமான உமாபதி ராமையா இயக்கும் படம் படம் ‘ராஜா கிளி.’

கதாநாயகனாக சமுத்திரக்கனி, கதாநாயகிகளாக சுவேடா ஷ்ரிம்ப்டன், சுபா தேவராஜ் ஆகியோர் நடிக்கின்றனர்.

முக்கிய வேடங்களில் ‘ஆடுகளம்’ நரேன், சிங்கர் கிரிஷ், அருள்தாஸ், பிரவின் குமார், தீபா, வெற்றிக்குமரன், சுரேஷ் காமாட்சி, விஜய் டிவி ஆண்ட்ரூஸ் சேவியர், டேனியல் போப், பழ.கருப்பையா, ரேஷ்மா பசுபலேட்டி, ஐஸ்வர்யா பாஸ்கரன், ‘சாட்டை’ துரைமுருகன், கொட்டாச்சி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

நடிகர் தம்பி ராமையா இந்த படத்திற்கு கதை, வசனம், பாடல்கள் எழுதி இசையமைத்து, முக்கிய வேடத்திலும் நடித்துள்ளார்.

‘சாட்டை’, ‘அப்பா’, ‘வினோதய சித்தம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் சமுத்திரக்கனி-தம்பி ராமையா கூட்டணியில் இந்தப்படம் உருவாகிறது.

படப்பிடிப்பு முடிந்து பட வெளியீட்டுக்கு முந்தைய போஸ்ட் புரொடக்சன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.

‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர், இசை வெளியீடு மற்றும் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் தெரியவரும்.

உருவாக்கத்தில் உறுதுணை:-

பின்னணி இசை: சாய் தினேஷ்
ஒளிப்பதிவு: கோபிநாத் & கேதார்நாத்
படத்தொகுப்பு: ஆர்.சுதர்ஷன்
கலை: வைரபாலன் & வீரசமர்
சண்டைப் பயிற்சி: ஸ்டண்ட் சில்வா
நடனம்: சாண்டி & பிருந்தா
ஆடை வடிவமைப்பு: நவதேவி ராஜ்குமார்
தயாரிப்பு மேற்பார்வை: சுப்ரமணியன்
தயாரிப்பு நிர்வாகம்: கே ஹெச் ஜெகதீஷன் & பிரவின் குமார்
மக்கள் தொடர்பு: ஏ.ஜான்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here