கமல், விக்ரம் நடித்த படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வாவின் புதிய படம் பூஜையுடன் துவக்கம்! கதைநாயகியாக அதிதி ராவ்!

கமல்ஹாசனின் ’தூங்கா வனம்’ மற்றும் விக்ரமின் ’கடாரம் கொண்டான்’ ஆகிய பாராட்டுக்குரிய படங்களை இயக்கிய ராஜேஷ் எம் செல்வா, அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா, அன்சன் பால் ஆகியோர் நடிக்கும் புதிய படத்தை இயக்குகிறார்.

இன்னும் பெயரிடப்படாத இப்படம் அதிரடி ஆக்‌ஷன் சப்ஜெக்டில் உருவாகவிருக்கிறது. படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் துவங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு சென்னை மற்றும் டெல்லியில் நடக்கவுள்ளது. படம் ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும்’ என்று உறுதியளிக்கிறது படக்குழு.

அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க, குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ரமேஷுடன் இணைந்து ரூக்ஸ் தயாரிக்கிறார்.

படத்துக்கு சைமன் கே கிங் இசையமைக்க, சுனோஜ் வேலாயுதம் ஒளிப்பதிவு செய்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here