‘பிக் பாஸ்’ நிரூப், சிம்ரன் ராஜ் உட்பட ஏழு முன்னணி கதாநாயகிகளுடன் நடிக்கும் படம் ‘ரெயின்போ.’
கதையில் வானவில் பிரதான கதாபாத்திரமாக வருவதால் ‘ரெயின்போ’ என பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் மைம் கோபி , மனோபாலா ,சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இடம் பெறுகிறார்கள்.
பிரமாண்ட பொருட்செலவில், பரபரப்பான திரைக்கதையில், ஃபேன்டசி காமெடி உருவாகவிருக்கும் இப்படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது.
விழாவில் இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் ரவி வர்மன்,அயலான் இயக்குனர் ஆர்.ரவிக்குமார், இயக்குனர் ஆர். மாதேஷ் , ஜப்பான் தொழிலதிபர் குறிஞ்சி செல்வன், நடிகர் பிக்பாஸ்’ அபினய், சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.சுமோ படத்தின் இயக்குனர் எஸ்.பி. ஹோசிமினிடம் உதவி இயக்குனராக இருந்த விவேக் கைபா பட்டாபிராம் இந்த படத்தை இயக்குகிறார். ஒளிப்பதிவாளர் வினோத் குமார், இசையமைப்பாளர் சுபாஷ் ஆனந்த், மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் ஆகியோர் கூட்டணியில் படப்பிடிப்பு இனிதே ஆரம்பித்தது.
வசந்த் ராமசாமியின் ‘ஸ்ரீ அன்னமார் புரொடக்சன்ஸ்’ மற்றும் இயக்குனர் ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது.
கூடுதல் தகவல்:- இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருந்தவர் எஸ்.பி. ஹோசிமின். பரத் நடித்த பிப்ரவரி 14 , சாந்தனு பாக்யராஜ் – சத்யராஜ் நடிப்பில் ஆயிரம் விளக்கு திரைப்படங்களை இயக்கியவர்.
இவரின் இயக்கத்தில் ஜப்பான் சுமோ Yoshinori Tashiro,
மிர்ச்சி சிவா, ப்ரியா ஆனந்த், யோகிபாபு, விடிவி கணேஷ் நடிப்பில், வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் டாக்டர் ஐசரி கணேஷ் தயாரிப்பில், இந்தியா மற்றும் ஜப்பானில் எடுக்கப்பட்ட எதிர்பார்ப்புக்குரிய ‘சுமோ’ படம் விரைவில் வெளியாக உள்ளது.