மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்கும் புதிய படம்… பான் இந்தியா படத்துக்கான அனைத்து தகுதிகளோடும் உருவாகிறது!

இந்தியா கடந்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பான் இந்தியா திரைப்படம் RRR.’ அதன் மூலம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற மெகா பவர் ஸ்டார் ராம் சரண் தற்போது ஷங்கர் இயக்கத்தில் மற்றொரு பான் இந்திய படத்தில் நடித்து வருகிறார்.
சரண் நடிக்கும் அடுத்த படம் இன்று அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. உப்பெண்ணா படத்தின் மூலம்  இயக்குநராக அறிமுகமாகிய இளம் இயக்குநர் புச்சி பாபு சனா ராம்சரணை இயக்குகிறார். பான் இந்தியா எண்டர்டெயின்ருக்கான அனைத்து தகுதிகளும் கொண்ட அட்டகாசமான திரைக்கதையை  இயக்குனர் தயார் செய்துள்ளார்.

முன்னணி தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்க, விருத்தி சினிமாஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் பேனர்களின் கீழ் அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகும் இப்படத்தின் மூலம் வெங்கட சதீஷ் கிலாரு திரைப்பட தயாரிப்பில் பிரமாண்டமாக இறங்குகிறார்.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் மற்றும் குழுவினர் பற்றிய விவரங்களை படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவார்கள்.

நடிகர்கள்: ராம் சரண்

தொழில்நுட்பக் குழு:
எழுத்து, இயக்கம்: புச்சி பாபு சனா
வழங்குபவர்கள்: மைத்ரி மூவி மேக்கர்ஸ்
பேனர்: விருத்தி சினிமாஸ், சுகுமார் ரைட்டிங்ஸ்
தயாரிப்பாளர்: வெங்கட சதீஷ் கிலாரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here