பரபரப்பான உளவியல் திரில்லராக ‘ரீ.’ பீட்சா போன்ற சுவாரஸ்ய அனுபவத்துக்கு தயாராகுங்கள்!

திரில்லர் படங்களுக்கு மக்களிடம் எப்போதுமே வரவேற்பு இருக்கும். அதிலும் கதைக்களம் டோன்ட் ப்ரீத், பீட்சா போன்று ஒரு வீட்டிற்குள்ளேயே அமைவதாக இருந்தால் சுவாரஸ்யத்திற்குப் பஞ்சமிருக்காது. அந்த வகையில் பக்கத்து பக்கத்தில் இருக்கும் இரண்டு வீடுகளில்  நடக்கும் உளவியல் ரீதியான பரபரப்பு படமாக ரீ’ படத்தை இயக்கியிருக்கிறார் சுந்தரவடிவேல்.

இந்தபடத்தில் கே.பாலசந்தரின் ஆஸ்தான எழுத்தாளர் அனந்துவின் சகோதரி பேரன் பிரசாந்த் ஸ்ரீனிவாசன் கதாநாயகனாக நடிக்கிறார். டூரிங் டாக்கீஸ், செம, ஹரஹர மகாதேவி, பேய் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்த காயத்ரி ரமா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும் பிரசாத் குமார், சங்கீதா பால், மணிசங்கர், சுரேஷ்பாபு ஆகியோருடன் படத்தின் இயக்குனர் சுந்தரவடிவேல் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய கைபேசி யுகத்தில், பக்கத்து வீட்டில் என்ன நடக்கிறது என்று யாரும் கண்டுகொள்வதில்லை. அப்படியிருக்க பக்கத்து வீட்டில் சின்ன சத்தம் வந்தாலும் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாத ஒருவரின் உளவியல் எப்படியிருக்கும்? அதன் விளைவாக ஏற்படும் சம்பவங்கள் என்ன? என்பதை சில உண்மை நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு விறுவிறுப்பாக அமைக்கப்பட்டுள்ள திரைக்கதையின் ஓட்டத்தில் சமகால பிரச்சனை ஒன்றையும் கையில் எடுத்து அதையும் லாவகமாக சொல்லியுள்ளார் இயக்குனர்.

இதன் படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 35 நாட்களில் நடைபெற்று முடிவடைந்தது. இப்படத்தில் இனிமையான இரண்டு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இதன் நிறைவு கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here