Home சினிமா ‘ஈரம்’ அறிவழகன் – நடிகர் ஆதி கூட்டணியின் ‘சப்தம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லைலா!

‘ஈரம்’ அறிவழகன் – நடிகர் ஆதி கூட்டணியின் ‘சப்தம்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் லைலா!

‘ஈரம்’ படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு இயக்குநர் அறிவழகன், நடிகர் ஆதியின் வெற்றிக் கூட்டணியில் உருவாகும் படம் ‘சப்தம்.’

காமெடி ஹாரர் படங்களுக்கிடையில் இதயத்தை அதிரவைக்கும் ஹாரர் திரில்லராக இந்த படம் உருவாகிறது. படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் குறித்த வ்வொரு தகவலும் படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில் அடுத்த அதிரடியாக படத்தின் முக்கியமான பாத்திரத்தில் லைலா நடிப்பதாக அறிவித்துள்ளது படக்குழு.
லைலாவின் கதாப்பாத்திரம் ரசிகர்கள் எதிர்பார்க்காத வகையில் ஆச்சர்யம் தரும் வகையிலும், மிக அழுத்தமான பாத்திரமாகவும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

இந்த படத்தின் நாயகியாக லகஷ்மி மேனன் இணைந்ததை சமீபத்தில் தெரியபடுத்திய நிலையில் படத்தில் இப்போது லைலா இணைந்திருப்பது ரசிகர்களிடம் எதிர்பார்பை தூண்டியுள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியான போஸ்டர் இணைய ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

Aalpha Frames இயக்குநர் அறிவழகன் மற்றும் 7G Films சிவா இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். ஈரம் படத்திற்கு இசையமைத்த தமன் இந்த படத்திற்கும் இசையமைக்கிறார்.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டீசர் பற்றிய அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தமிழ் திரையுலகில் முதல் படத்திலேயே முத்திரை பதித்தவர் இயக்குநர் அறிவழகன். திரில்லர் படங்களை தனக்கே உரிய தனித்த திரைக்கதையில் வெற்றிப்படங்களாக மாற்றிய அறிவழகன், தயாரிப்பாளராக தனது புதிய பயணத்தை துவங்கியுள்ளார். ஈரம் படம் மூலம் அறிமுகமான இயக்குநர் அறிவழகன் தனது முதல் பட ஹீரோவான ஆதியுடன் இப்படத்தில் இணைகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்