சாது பர்லிங்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள முதல் படைப்பு ‘சிறுவன் சாமுவேல்.’ 12 வயதுக்குட்பட்ட சிறார்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்த படத்தின் முன்னோட்டத்தை நடிகர் ஆர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
இதில் குழந்தை நட்சத்திரங்களான அஜிதன், விஷ்ணு, அபர்ணா, பில்லிபோஸ், செல்லப்பன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சிவானந்த் காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்துக்கு ஸ்டான்லி, மனோ என இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
துடுப்பாட்ட விளையாட்டால் ஈர்க்கப்படும் சிறார்களின் உணர்வுகளை மையப்படுத்தி தயாராகியிருக்கும் இந்த படத்தை கண்ட்ரி சைட் பிலிம் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தின் வட்டார வழக்குச் சொற்களுடன், அங்கு வாழும் மக்களின் யதார்த்த வாழ்வியலுடன் ‘சிறுவன் சாமுவேல்’ தயாராகியுள்ளதால் இந்த படத்தின் முன்னோட்டத்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.