விக்ராந்த் – மெஹ்ரீன் பிர்ஸாதா, ருக்ஷார் தில்லான் நடித்துள்ள ‘ஸ்பார்க் லைஃப்’ படத்தின் டீசர் ஆகஸ்ட் 2-ம் தேதி வெளியாகும் என சுவாரஸ்யமான போஸ்டருடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக பட்ஜெட்டில் தயாராகும் ஆக்ஷன் திரில்லரான இந்த படத்தில் குரு சோமசுந்தரம் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். நாசர், சுகாசினி மணிரத்னம், வெண்ணலா கிஷோர், சத்யா, ஸ்ரீகாந்த், கிரண் ஐயங்கார், அன்னபூர்ணமா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
படத்தின் தயாரிப்பாளர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டீசரை பற்றிய ஒரு அற்புதமான அப்டேட்டை சுவராசியமான போஸ்டருடன் வெளியிட்டிருக்கிறார்கள். இப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 2ஆம் தேதி மாலை 6:45 மணிக்கு வெளியாகிறது. இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டரில் கையில் முகமுடியுடன் அர்த்தமுள்ள அவதாரத்தில் விக்ராந்த் காணப்படுகிறார். அழுத்தமான கருப்பு வண்ண பின்னணியில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த போஸ்டர், அனைவரின் கண்களையும் கவர்ந்துள்ளது.
படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்து, தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமான இதில் மெஹ்ரீன் பிர்ஸாதா கதாநாயகியாக நடிக்கிறார். இவர் அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற F3 எனும் படத்தில் தனது வசீகரமான நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருந்தார். சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமான இந்த படத்தின் மூலம் விக்ராந்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.
டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் இப்படத்தை இயக்கி, தயாரித்து வருகிறது. ‘ஹிருதயம்’ புகழ் ஹேஷாம் அப்துல் வஹாப் இந்த தனித்துவம் மிக்க த்ரில்லர் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
டெஃப் ஃப்ராக் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் படைப்புகள், உயர்தரத்துடன் சைக்காலஜிக்கல் ஆக்சன் திரில்லர் திரைப்படமாக தயாரிக்கிறது. இப்படத்தின் படைப்பாளிகள்- தரத்திலோ, உள்ளடக்கத்திலோ எந்த சமரசமும் இல்லாமல் பிரமாண்டமான பொருட்செலவில் தயாரிக்கிறார்கள்.