ஒயின்ஷாப் குத்தகை, வெடிக்கும் மோதல், தொடரும் பகை, சமூகத்துக்கு அறிவுரை… பிரபு சாலமனின் இணை இயக்குநர் இயக்கும் ‘சாலா’ படத்தில் அத்தனையும் இருக்கு!

‘கதைதான் ஹீரோ’ என்ற வரிசையில் வருகிற படங்கள் பெரியளவில் வெற்றி பெறுகின்றன. அந்த வகையில் இயக்குநர் பிரபு சாலமனிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.டி. மணிபால் ‘சாலா’ என்ற கதையாழமுள்ள படத்தை இயக்கிவருகிறார்.

மதுப்பழக்கம் காரணமாக சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து பேசும் விதத்தில் படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு ஒயின் ஷாப்பை குத்தகைக்கு எடுக்கும் செயல்பாட்டில் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்படும் மோதல், பகை என கதை பரபரப்புடன் நகர்கிறது.

அறிமுக நடிகர் தீரன் கதையின் நாயகனாக சாலமன் (எ) சாலாவாக நடித்துள்ளார். கதைப்படி அவர் தனது 30-வது வயதின் முற்பகுதியில், ஆறு பார்களை சொந்தம் கொண்டாடுபவனாக முரட்டுத்தனமானவனாக இருக்கிறார். மேலும் குணா என்ற பெரியவரின் நம்பிக்கைக்குரியவனாக இருக்கிறார்.

அறிமுக நடிகை ரேஷ்மா, கதாநாயகியாக புனிதா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 25 வயதான சமூக ஆர்வலர், மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்க்கும் பள்ளி ஆசிரியர் என அவரது கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வில்லனாக சார்லஸ் வினோத் மற்றும் ஸ்ரீநாத், அருள் தாஸ் மற்றும் சம்பத் ராம் ஆகியோர் பிற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரவீந்திரநாத் குரு இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். புவன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார், வைர பாலன் கலை இயக்குநராக உள்ளார்.

படத்தை பீப்பிள் மீடியா ஃபேக்டரியின் டி.ஜி. விஸ்வ பிரசாத், விவேக் குச்சிபோட்லா இணைந்து தயாரிக்கின்றனர்.

உருவாக்கத்தில் உறுதுணை:-
எழுத்து, இயக்கம்: எஸ் டி மணிபால்
ஒளிப்பதிவு: ரவீந்திரநாத் குரு
இசை: தீசன்
கலை: வைரபாலன்
எடிட்டிங்: புவன்
ஸ்டண்ட்: மகேஷ் மேத்யூ, ‘ரக்கர்’ ராம்
நடன இயக்குநர்: நோபல் பால்
ஆடை: நாகு
ஒலி வடிவமைப்பு: லட்சுமி நாராயண ஏ.எஸ்.
விஎஃப்எக்ஸ்: டி நோட் மூர்த்தி
கலரிஸ்ட்: ஆர்.நந்தகுமார்
தயாரிப்பு நிர்வாகி: வே.கி.துரைசாமி
இணை இயக்குநர்: எஸ்.ஏ.பொன்மல்லன்
ஒப்பனை: ஹரி பிரசாத்
ஸ்டில்ஸ்: ரஞ்சித்
கண்டெண்ட் ஹெட்: சத்ய பாவனா காதம்பரி
விளம்பர வடிவமைப்பாளர்: ஜோசப் ஜாக்சன்
தயாரிப்பு: டிஜி விஸ்வ பிரசாத்
பேனர்: மக்கள் மீடியா ஃபேக்டரி
இணை தயாரிப்பு: விவேக் குச்சிபோட்லா
கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: வி ஸ்ரீ நட்ராஜ்
தமிழ்நாடு வெளியீடு: டிரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர் ரவீந்திரன்
மக்கள் தொடர்பு: சுரேஷ் சந்திரா, ரேகா டி’ஒன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here