Home சினிமா நிவின் பாலி நடித்துள்ள சர்வம் மாயா கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ்!

நிவின் பாலி நடித்துள்ள சர்வம் மாயா கிறிஸ்துமஸ் தினத்தில் ரிலீஸ்!

நிவின் பாலி நடிப்பில், மூத்த இயக்குநர் சத்யன் அந்திக்காடின் மகனான அகில் சத்யன் இயக்கியுள்ள சர்வம் மாயா வரும் டிசம்பர் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

அது குறித்த அறிவிப்பு போஸ்டரில் நிவின் பாலி, அஜு வர்கீஸ் மற்றும் மூத்த நடிகர் ஜனார்த்தனன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அவர்களின் கவர்ச்சிகரமான தோற்றம், படத்தின் வித்தியாசமான உலகை அனுபவிக்கும் ஆவலைத் தூண்டுகிறது.

போஸ்டர் இப்படம் முழுக்க முழுக்க குடும்பத்தோடு ரசிக்கக்கூடிய நகைச்சுவை திரைப்படமாக இருக்கும் என்பதை தெளிவாக உணர்த்துகிறது. மூவரின் சுவாரஸ்யமான முகபாவனைகள், அனைத்து தரப்பினரையும் கவரும் நகைச்சுவை கலாட்டாவாக இப்படம் இருக்குமென்பதை உறுதி செய்கிறது. காமெடி டிராமா வகை படங்களில் ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார் என்பதையும் இந்த போஸ்டர் உணர்த்துகிறது.

அட்டகாசமான காமெடியுடன், கொண்டாட்ட உணர்வை பதிவு செய்யும் இந்த படம், இந்த ஆண்டின் சிறந்த விடுமுறை கொண்டாட்ட படமாக இருக்கும்., ஃபயர்ஃப்ளை ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் “சர்வம் மாயா”, 2025-ன் மிகப்பெரிய பண்டிகை வெளியீடுகளில் ஒன்றாக உருவாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

தயவு செய்து அடுத்தவர்களின் உழைப்பை சுரண்டாதீர்கள்.. முடிந்தால் சுயமாக எழுத கற்றுக் கொள்ளுங்கள்