‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘சூர்யா’ஸ் சாட்டர்டே’ திரைப்படத்தின் செகண்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த படத்துக்கான இதுவரை வெளியிட்ட விளம்பரங்களில் படத்தின் கதாநாயகனை ஆக்ரோஷமான இளைஞனாகவே காட்சிப்படுத்தினர். ஆனால் அவர் சனிக்கிழமைகளில் மட்டுமே வன்முறையாளர். மற்ற நாட்களில் சூர்யாவின் தோற்றத்தை ரசிக்கவும், அவரது புதிய பரிமாணத்தை அனுபவிக்கவும்.. தற்போது அந்த கதாபாத்திரத்தின் செகண்ட் லுக்கை வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நம் பக்கத்து வீட்டு பையனின் அவதாரத்தில், வசீகரிக்கும் புன்னகையுடன் தோன்றுகிறார். மேலும் அந்தப் போஸ்டரில் அவர் பைக் ஓட்டுவது போலும் உள்ளது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிளில் சூர்யா எப்படி இருந்தார்? என்பதற்கு நேர் மாறாக அவரது இந்த தோற்றம் உள்ளது. இதன் மூலம் இந்த தனித்துவமான கதாபாத்திரம் வெவ்வேறு வகையான அடுக்குகளை கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
இயக்குநர் விவேக் ஆத்ரேயா இயக்கி வரும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தைப் பற்றிய புதிய தகவல்களை விரைவில் வழங்கவுள்ளார்கள்.