மூன்று ஹீரோயின்களோடு ஆதித் அருண் நடிக்கும் ‘ஸ்வீட்டி நாட்டி’ பூஜையுடன் துவக்கம்! முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகிறது.

சூப்பர் ஹிட்டான உளவுத்துறை படத்தை இயக்கிய ரமேஷ் செல்வனிடமும் பல படங்களில் இணை இயக்குனராகவும் பணியாற்றிய ஜி.ராஜசேகர் முழுக்க முழுக்க காமெடி படைப்பாக இயக்கும் படம் ‘ஸ்வீட்டி நாட்டி.’

தெலுங்கில் 10-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாகவும் தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் உள்ளிட்ட படங்களிலும் நடித்த ஆதித் அருண்(எ)திரிகன் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் இந்த படத்தின் கதாநாயகிகள். ரவி மரியா, பிரபல தெலுங்கு நடிகர் ஆளி, ரகு பாபு இவர்களுடன், விஜய் டிவி தனசேகர், வினோத் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

படப்பிடிப்பு இன்று ஹைதராபாத்தில் ராம நாயுடு ஸ்டுடியோவில் பூஜையுடன் துவங்கியது.

படம் பற்றி இயக்குநரிடம் கேட்டபோது, ”படம் பார்க்க வரும் அனைவரும் துவக்கம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே நோக்கம். அதற்கேற்றபடி, மூன்று கோணங்களில் நடக்கும் வித்தியாசமான கதையை முழுக்க முழுக்க காமெடி கலாட்டாவாக உருவாக்குகிறோம். ஹைதராபாத், கோவை, ஊட்டி போன்ற இடங்களில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.  பாடல்களை துபாயில் பல லட்சம் செலவில் பிரமாண்டமாக படமாக்கவிருக்கிறோம்” என்றார்.

படக்குழு:-

‘அருண் விஷுவல்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பில் வி எம் ஆர் ரமேஷ், ஆர் அருண் இருவரும் இணைந்து பிரமாண்டமாக தயாரிக்கின்றனர்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பான் இந்திய பெண் ஒளிப்பதிவாளர் சி. விஜய ஸ்ரீ ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயகுமார் கலை இயக்குநராக பணிபுரிகிறார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here