அருண் விஜய் நடிப்பில் விரைவில் வெளிவரவுள்ள படம் ‘சினம்.’ இந்த படத்தினை மூவி ஸ்லைட்ஸ் பிரைவேட் லிமிடெட்’ (Movie Slides Pvt. Ltd) சார்பில் ஆர். விஜயகுமார் தயாரித்துள்ளார். இயக்குநர் ஜி.என்.ஆர். குமரவேலன் இயக்கியுள்ளார். அருண் விஜய், பாலக் லால்வானி, காளி வெங்கட், ஆர்.என்.ஆர். மனோகர், கே.எஸ்.ஜி. வெங்கடேஷ், மறுமலர்ச்சி பாரதி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
‘இந்த படம் அருண் விஜய் ரசிகர்களுக்கான விருந்தாக இருக்கும். குடும்பத்தோடு பார்க்கும்படியான படமாகவும் இருக்கும். அதற்கான அத்தனை அம்சங்களும் படத்தில் உள்ளது’ என்று சொல்வது போலிருக்கிறது படத்தின் டிரெய்லர். பாடல்களும் மனதைக் கவர்கின்றன. அதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் படத்தின் வெளியீட்டை முன்னிட்டு அருண் விஜய் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், திண்டுக்கல், மதுரை, திருச்சி, கும்பகோணம், கடலூர், பாண்டிச்சேரி, விழுப்புரம், திருவண்ணாமலை,வேலூர் என தமிழ்நாட்டின் 13 நகரங்களுக்கு 3 நாள் பயணித்தார்.
இந்த மூன்று நாட்களும் ரசிகர்கள் வழியெங்கும் தந்த வரவேற்பிலும், பேரன்பிலும் சிக்கி அருண் விஜய் திணறை போயிருக்கிறார்.
அருண் விஜய்க்கு ரசிகர்கள் ஆர்ப்பாட்டமான அன்புகாட்ட, அருண்விஜய் தன் ரசிகர்களிடம் அதைவிட அன்பாக பழகிய விதம் ரசிகர்களுக்கு நெகிழ்ச்சி தந்துள்ளது.
படக்குழு:-
கதை-உரையாடல்கள் – ஆர். சரவணன்
பாடல் வரிகள் – மதன் கார்க்கி, ஏக்நாத், பிரியன், தமிழனங்கு
இசை – ஷபீர்
ஒளிப்பதிவு – கோபிநாத்
கலை – மைக்கேல் BFA
எடிட்டர் – ராஜாமுகமது
காஸ்ட்யூம் டிசைனர் – ஆர்த்தி அருண்
மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D’One


