சஸ்பென்ஸ் ஆக்‌ஷன் த்ரில்லர் சப்ஜெக்டில் சத்யராஜ் நடிக்கும் ‘வெப்பன்.’

பல மொழிப் படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததன் மூலம் ’பான் இந்தியா’ நடிகர் என்ற உயரத்தை நடிகர் சத்யராஜ் அடைந்திருக்கிறார். அவரது அடுத்தடுத்த படங்களின் வரிசை என்பது நம்பிக்கைக்குரிய மற்றும் எதிர்ப்பார்ப்புகளை தூண்டுவதாக இருக்கிறது. இந்தப் படங்கள் தற்போது தயாரிப்பு பணிகளில் இருந்து வருகிறது.

வசந்த் ரவி

அந்த வகையில் அவர் தற்போது ’வெப்பன்’ என்ற புதிய படத்தில் ஒப்பந்தமாகி உள்ளார். ’தரமணி’, ‘ராக்கி’ மற்றும் தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரக்கூடிய வசந்த் ரவி இந்தப் படத்தில் மற்றொரு கதாநாயகனாக நடிக்கிறார்.

சஸ்பென்ஸ்- ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை அடிப்படையாக கொண்ட இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னை மற்றும் மலைப் பிரதேசம் போன்ற இடங்களில் நடைபெற இருக்கிறது.

இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரிக்க, குகன் சென்னியப்பன் இயக்குகிறார். படத்தின் மற்ற நடிகர்கள் குறித்தான விவரம் விரைவில் வெளியிடப்படும்.

படத்தின் தொழில்நுட்பக் குழு விவரம்:
இசை : ஜிப்ரான்,
ஒளிப்பதிவு: பிரபு ராகவ்,
எடிட்டிங்: நஷ்,
கலை: சுபேந்தர்,
சண்டைப் பயிற்சி: சுதேஷ்,
ஆடை வடிவமைப்பாளர்: லேகா,
நிர்வாக தயாரிப்பு: A ரிஸ்வான்,
ப்ரொடக்‌ஷன் கண்ட்ரோலர்: கந்தன்,
விளம்பர வடிவமைப்பு: அஷோக்

நடிகர் பாபி சிம்ஹா, பார்வதி நாயர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ‘வெள்ளை ராஜா’ இணையத் தொடரை அமேசான் ஓடிடி தளத்துக்காக முன்பு இயக்குநர் குகன் சென்னியப்பன் இயக்கி இருந்தார். இவர் ‘சவாரி’ என்ற சைக்கோ த்ரில்லர் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்த படம் மூலம் ‘நாளைய இயக்குநர்- சீசன்3’-ல் இரண்டாவது ரன்னர்-அப்பாக தேர்வு செய்யப்பட்டது.

‘வெப்பன்’ படத்தின் டைட்டில் லுக், நடிகர் சத்யராஜ்ஜின் பிறந்தநாளான அக்டோபர் 3ம் தேதி அன்று வெளியிடப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here