பிரின்ஸ் பிக்சர்ஸின் ஃபுல் மீல்ஸ்… தீபாவளி ரேஸில் முந்தும் சர்தார்!

 

தமிழ்த் திரையுலகில் ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளிக்கும் விதமாக வித்தியாசமான கதைக்களத்தில் நூறு சதவீத பொழுதுபோக்கு அம்சம் கொண்ட படங்களை பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரித்து வருபவர் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.

கமர்ஷியல் படங்களுக்கு என்றுமே ரசிகர்களிடம் வரவேற்பு குறைந்ததில்லை… என்ன ஒன்று, அதை ரசிகர்களின் பல்ஸ் அறிந்து கொடுக்க வேண்டும்.. அவ்வளவுதான்..

தங்களது தயாரிப்பில் உருவாகி தீபாவளி ரிலீஸாக நாளை (அக்-21) வெளியாகும் சர்தார் படத்தை அப்படி ஒரு புல் மீல்ஸ் ஆக ரசிகர்களுக்கு வழங்கத் தயாராக இருக்கிறது பிரின்ஸ் பிக்சர்ஸ்.

கார்த்தியின் டபுள் ஆக்சன், ராஷி கண்ணா, ரஜிஷா விஜயனின் கலர்புல் காம்போ, இருக்கையில் அமர்ந்ததுமே ரசிகர்களை கதையோட்டத்திற்குள் இழுத்து செல்லும். ஜி.வி பிரகாஷின் இசை என ரசிகர்களின் முழு திருப்திக்கு நான் கியாரண்டி என்கிறார் இயக்குநர் பி.எஸ்.மித்ரன்.

அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே சர்தார் படத்திற்கான எதிர்பார்ப்பு லெவல் எகிறியதால் இந்தப் படத்தின் வியாபாரத்திலும் அது பெரிய அளவில் எதிரொலித்துள்ளது..

குறிப்பாக அதிக அளவிலான திரையரங்குகள் இந்தப் படத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் தீபாவளி ரேஸில் சர்தார் முன்னிலையில் இருக்கிறது.

அழகான தரமான எண்டெர்டெய்ன்மெண்ட் படங்களைத் தொடர்ச்சியாக மக்களின் பார்வைக்கு தந்து வரும் பிரின்ஸ் பிக்சர்ஸ், அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களுடன் கைகோர்த்து இன்னும் பிரமிப்பூட்டும் படைப்புகளைத் தர இருக்கிறது என்கிறார் தயாரிப்பாளர் லக்ஷ்மண் குமார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here