மகள் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார்! துவங்கியது புதிய படம்!

 

கடந்த 2012ல் ‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அடுத்ததாக 2015-ல் கௌதம் கார்த்திக் நடிப்பில் ‘வை ராஜா வை’ என்கிற படத்தை இயக்கினார்.

தற்போது மீண்டும் மூன்றாவது முறையாக டைரக்ஷனில் இறங்கியுள்ளார். அவர் இயக்கத்தில், லைகா புரொடக்ஷன்ஸ் சார்பில் சுபாஸ்கரன் தயாரிக்கும் புதிய படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கின்றனர்.

‘லால் சலாம்’ என பெயரிட்டுள்ள இந்த படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க உள்ளார்.

படத்திற்கு விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்குனராக ராமு தங்கராஜ், படத்தொகுப்பாளராக B.பிரவீண் பாஸ்கர் ஆகியோர் பணியாற்ற உள்ளனர். தயாரிப்பு மேற்பார்வை சேது பாண்டியன் , நிர்வாக தயாரிப்பாளர் N சுப்ரமணியன் .

படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் குறித்த விபரங்கள் விரைவில் தெரியவரும்.

லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று லைகா புரொடக்ஷன்ஸ் தலைமை நிர்வாகி தமிழ்க் குமரன் தெரிவித்துள்ளார்.

மக்கள் தொடர்பு: ரியாஸ் கே. அஹமத்
V4U Media

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here