தனித்துவமான திறமையால் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன்.
அவர் இப்போது மெகா ஸ்டார் சிரஞ்சீவி கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘வால்டேர் வீரய்யா’, மாஸ் ஹீரோ பாலகிருஷ்ணா நடிப்பில் தயாராகி இருக்கும் ‘வீரசிம்ஹா ரெட்டி’ படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இந்த இரண்டு படங்களும் வரும் ஜனவரி மாத சங்கராந்தி விடுமுறை தினத்தில் வெளியாகிறது. ஒரே நாளில், அவர் நடித்த இரண்டு படங்களும் வெளியாவதால், முதன்முறையாக அவர் இரட்டை பரிசினை வழங்குவதால் மகிழ்ச்சியடைந்த அவருடைய ரசிகர்கள், இந்த செய்தியை இணையத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
ஸ்ருதிஹாசன் தற்போது ‘கே. ஜி. எஃப்’ புகழ் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும் ‘சலார்’ எனும் திரைப்படத்திலும், ‘தி ஐ’ எனும் ஹாலிவுட் படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.